Home Jaffna News ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு மைத்தியிடமிருந்து வந்த பேரிடியான செய்தி!

ஹிஸ்புல்லாவின் பல்கலைக்கழகத்திற்கு மைத்தியிடமிருந்து வந்த பேரிடியான செய்தி!

0
649

புனாணையில் அமைந்துள்ள மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஜனாதிபதி முக்கிய அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.

குறித்த பல்கலைக்கழகம் உயர்கல்வி அமைச்சின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளார்.

இதன் செயற்பாடுகள் உயர்கல்வி அமைச்சு ஒழுங்குபடுத்தும். அமைச்சின் சட்டதிட்டங்களுக்கு அமைய குறித்த பல்கலைக்கழகம் செயற்படும் அவர் குறிப்பிட்டார்.

கல்முனை, சாய்ந்தமருது பிரதேசத்திற்கு ஜனாதிபதி இன்று கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இதன்போது கிழக்கு மாகாண முஸ்லிம் இளைஞர்களை சந்தித்த போது ஜனாதிபதி இதனை குறிப்பிட்டுள்ளார்.

பல்கலைக்கழகத்தில் நடத்தி செல்லப்படும் கற்றை நெறி தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.

கிழக்கு மாகாண ஆளுநரின் கனவு கோட்டையாக இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வந்தது. மட்டக்களப்பு பல்கலைக்கழகம் என்ற பெயரில் உள்ள கல்லூரி இஸ்லாமிய மதஅடிப்படைவாத கல்வியை சர்வதேச அளவில் போதிப்பதற்காக அமைக்கப்பட்டது.

இந்நிலையில் ஜனாதிபதி அதிரடி உத்தரவு ஹிஸ்புல்லாவின் கனவுக்கு பேரிடியாக மாறியுள்ளது. அவரின் இஸ்லாமிய அடிப்படைவாத சிந்தனைக்கும் பெரும் ஏமாற்றம் கிடைத்துள்ளது.

Previous articleநடிகர் விஜயை மிஞ்சிய இளைஞர்! பாசக்கார தங்கையை நீங்களும் பாருங்கள்! ரியக்சன் இருக்கே அது வேற லெவல்!
Next articleயானை இறந்து போன சோகத்தில் கட்டிப்பிடித்து கதறும் பூசாரி! நெகிழ வைத்த கண்ணீர் காட்சி!