Home thatstamil one india tamil oneindia tamil ulaga seithigal குட்டை பாவாடை அணிந்து வந்த பெண்ணை! கடுமையாக விமர்சித்த மற்றொரு பெண்! இணையத்தில் பரவி வரும்...

குட்டை பாவாடை அணிந்து வந்த பெண்ணை! கடுமையாக விமர்சித்த மற்றொரு பெண்! இணையத்தில் பரவி வரும் காட்சி!

0
586

ஹரியானாவில், குட்டை பாவாடை அணிந்து ஷாப்பிங்கிற்கு வந்த பெண்ணை, மற்றொரு பெண் தரக்குறைவாக விமர்சிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. ஷாப்பிங் ஒன்றுக்கு, குட்டைப்பாவாடை அணிந்த பெண் ஒருவர் தனது தோழிகளுடன் இணைந்து வந்துள்ளார்.

அப்போது அங்கு நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர், குட்டைப் பாவாடை அணிந்த பெண்ணின் ஆடையை கேலி செய்ததுடன், அந்த பெண்ணை மானபங்கப்படுத்தி பாடம் புகட்டுமாறு அங்கிருந்த ஆண்களையும் அழைத்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தரப்பினர், ஆடை குறித்து தரக்குறைவாக விமர்சித்த பெண், உடனடியாக மன்னிப்பு கேட்கவேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இளம் பெண்களின் உடை குறித்து சர்ச்சையான கருத்தை தெரிவித்த நடுத்தர வயது பெண்ணிற்கு சமூக வலைதளங்களில் எதிர்ப்பு வலுக்கிறது#ViralVideo #Harassed #MoralPolicing

Posted by எமது பக்கம் on Wednesday, May 1, 2019

இவ்விவகாரத்தை அப்பெண்கள் காவல்துறையின் வசம் எடுத்துச் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்த இந்த காட்சி இணையத்தளங்களிலும் வைரலாகி வருகிறது…

Previous articleஇலங்கைக்குள் அமெரிக்க இராணுவப் புலனாய்வு பிரிவற்கு பாரிய நெருக்கடி! அடுத்து என்ன நடக்கும்!
Next articleடிக்டாக் வீடியோவால் 4பேருக்கு ஏற்பட்ட விபரீதம்! வெளியான சோக சம்பவம்!