எதற்கெடுத்தாலும் பதட்டப்படுகிற ஐந்து ராசிகள் எவை தெரியுமா! அட நீங்களும் இந்த ராசியா!

0

எல்லாருக்கும் உள்ளுக்குள் பயம் என்பது இருக்கத்தான் செய்யும். எந்தவொரு செயல் நடந்தாலும் அதற்கு மனிதன் தன் உணர்வுகளை வெளிப்படுத்தத்தான் செய்வான்.

பயம், கோபம், மகிழ்ச்சி, சோகம் இப்படி தன் உணர்வுகளை வெவ்வேறு வகையில் வெளிப்படுத்துவான். சில பேர்கள் எதைக் கண்டாலும் தைரியமாக இருப்பார்கள். சில பேர்கள் எடுத்ததுக்கு எல்லாம் பயப்பட ஆரம்பிப்பார்கள்.

இப்படி சின்ன விஷயத்துக்கு கூட நடுங்கும் ராசிக்காரர்களை பற்றி தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

மிதுனம்

இவர்கள் ஒரு வேலையை எடுத்து செய்வதில் போதுமான எண்ணம் கொண்டிருக்க மாட்டார்கள். எது சரி எது தவறு என்பதை இவர்களால் கணிக்க இயலாது. தங்கள் வலிமையை அறிந்திருக்க மாட்டார்கள்.

இதனால் அவர்கள் ஒரு வேலையை செய்வது பெரிய கஷ்டமாக இருக்கும். மேலும் யாரையும் ஏமாற்றக் கூடாது என்று மிகவும் கவலைப்படுவார்கள். இந்த பயமே அவர்களை மிகுந்த கவலைக்குள்ளாக்கி விடும்.

கன்னி

இவர்கள் கவலைப்படுவதற்கு உண்மையில் காரணமே தேவையில்லை. சும்மா உட்கார்ந்து இருக்கும் போதே எதாவது பழைய விஷயங்களை நினைத்து கவலையில் மூழ்கி விடுவார்கள்.

படத்தில் வரும் காட்சிகளைப் போல படுகொலை சம்பவமோ, கொள்ளை சம்பவமோ போதும் இவர்கள் கவலைப்படுவதற்கு. இவர்கள் தங்களை நேர்மையாக நினைப்பதால் ஒரு வேலையை முடிப்பதற்குள் பதட்டமாகி கடைசியில் சற்று சிரமத்துடன் முடித்து விடுவார்கள்.

மீனம்

இவர்கள் உணர்ச்சிமிக்கவராக உதவிகரமாக இருக்க மாட்டார்கள். ஆனால் உள்ளுக்குள் மிகுந்த சிந்தனையாளராக இருப்பார்கள். மற்றவர்கள் முன்னால் எளிதாக தங்கள் மனதை திறக்க மாட்டார்கள். இதற்கு காரணம் மற்றவர்கள் மீதான நம்பிக்கை இவர்களுக்கு குறைவாக இருக்கும்.

இதனால் அதிகமாக பேசமாட்டார்கள். மற்றவர்களுடன் பேசுவதிலே முதலில் பதட்டமாக இருப்பார்கள். அதே மாதிரி ரகசியமான விஷயங்களை செய்யும் போதும் இதே பதட்ட நிலையை அடைகிறார்கள். எனவே மற்றவர்களுடன் நெருக்கமான ஒரு உறவை மேற்கொள்ள வேண்டும் என்றால் முதலில் அவர்கள் பதட்டத்தை விட்டொழிக்க வேண்டும்.

துலாம்

இவர்களும் உணர்ச்சிவசப்படக் கூடிய ராசிக்காரர்கள் தான். இவர்கள் முடிவெடுத்த பிறகு அதை நினைத்து பதட்டமாக இருப்பார்கள். இவர்களுக்கு பிடிக்காத விஷயங்களை பார்க்கும் போதும் பதட்டமாக ஆகி விடுவார்கள். விருப்பமில்லை என்ற பயமே அவர்களை பதட்டமாக்கி விடும்.

எதையும் இருமுறை யோசிப்பது, தவறு செய்தால் பதட்டமாக இருப்பது இவர்களது குணமாகும். மற்றவர்கள் மத்தியில் இந்த பதட்ட நிலையை இவர்கள் கைவிட்டு விட்டால் சந்தோஷமான நட்பு வட்டாரங்கள் சேரும்.

கடகம்

இவர்கள் நீரை அடையாளமாக கொண்ட ராசி யாகும். இவர்கள் மிகவும் உணர்வுப் பூர்வமாக, கவனிப்பு குணத்தை கொண்டவர்கள். ஒருத்தரை விரும்பினால் கூட சொல்ல கூச்சப்படுவார்கள்.

மற்றவர்கள் முன்னால் பதட்டமாக மற்றும் வெட்கப்படுவர். அதே மாதிரி தோல்வியை இவர்களால் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அப்பொழுது பதட்டமடைந்து விடுவார்கள். இவர்கள் தங்கள் சுய நம்பிக்கையை வளர்த்து கொண்டால் நட்பு வட்டாரங்கள் பெருகும். மற்றவர்களை சந்திப்பதில் கூட பதட்டத்தால் அவதிப்படுவர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleயாழ் சாவகச்சேரியில் ஜாக்பொட் பரிசு 6 கோடி ரூபா! அதிர்ஷ்டசாலி யார் தெரியுமா!
Next articleதன் நிறம் குறித்த கிண்டல் பற்றி அட்லீ சில வருடங்களுக்கு முன் கூறிய செம்ம பதில்!