Home thatstamil one india tamil oneindia tamil கண்ணீருடன் ஈழத்தில் கால் வைத்த யாழ். வாரிசு சின்மயி! கதறி அழும் குடும்பம்! நெகிழ்ச்சியின் உச்சத்தில்...

கண்ணீருடன் ஈழத்தில் கால் வைத்த யாழ். வாரிசு சின்மயி! கதறி அழும் குடும்பம்! நெகிழ்ச்சியின் உச்சத்தில் பார்வையாளர்கள்!

0
534

ஈழத்து குயில் சின்மயி பிறந்து ஆறு மாதங்களில் யாழில் இருந்து உறவுகளை பிரிந்து அம்மாவுடன் கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

இலங்கையில் யுத்தம் காரணமாக பல்வேறு குடும்பங்கள் அந்த காலப்பகுதியில் புலம்பெயர்ந்து பல நாடுகளுக்கு சென்றிருந்தனர்.

அப்படி யாழில் இருந்து கனடா சென்ற சின்மயி குடும்பத்திற்கு மீண்டும் தாய் நாட்டுக்கு வருவதற்கான வாய்ப்பு கிடைக்கவே இல்லை. இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் அந்த வாய்ப்பு அவரின் குடும்பத்திற்கு கிடைத்திருந்தது.

இன்று ஒளிபரப்பாகிய நிகழ்ச்சியில் இலங்கை சென்ற போது இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவங்களை சின்மயி பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதன் முறை தாய் நாட்டுக்கு திரும்பிய போது, உறவினர்களின் கண்ணீருக்கு மத்தியில் பாசத்தினை பரிமாரி கொண்டுள்ளனர். யுத்தம் காரணமாக யாழில் இருந்து அவர்களின் குடும்பமும் வவுனியா என்ற இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றுள்ளது.

வவுனியாவில் சென்று மகிழ்ச்சியுடன் உறவுகளை சந்தித்துள்ளனர். பார்க்கவே முடியாது என்று நினைத்த ஈழத்து உறவுகளை இசை இன்று ஒன்று சேர்த்து விட்டது என்று நெகிழ்ச்சியுடன் அவரின் அம்மா குறிப்பிட்டுள்ளார்.

இதனை பார்த்து பார்வையாளர்கள் முதல் அனைவரும் நெகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேவேளை, அது மாத்திரம் இன்றி, சின்மயியுடன் அவரின் அம்மாவுக்கு பாடுவதற்கான வாய்ப்பும் இன்று கிடைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Previous articleஆணுறுப்புக்கு வந்த விசித்திர நோய்! 52 வயது நபருக்கு நடந்த சோகம்! அதிர்ச்சி தகவல்!
Next articleகுறளரசன் இஸ்லாம் பெண்ணை மணக்கிறார்! முதல் திருமண பத்திரிக்கை யாருக்கு தெரியுமா! பரவி வரும் புகைப்படம்!