குறளரசன் இஸ்லாம் பெண்ணை மணக்கிறார்! முதல் திருமண பத்திரிக்கை யாருக்கு தெரியுமா! பரவி வரும் புகைப்படம்!

0

சிம்புவின் தம்பி குறளரசன் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்கிறார். சிம்புவின் தம்பி குறளரசன் அண்மையில் இஸ்லாத்திற்கு மாறினார். இசையமைப்பாளர்கள் இஸ்லாத்திற்கு மாறுவது ஃபேஷனாகி வருகிறது என்று விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் அவர் தனது காதலியை திருமணம் செய்ய மதம் மாறியதாகவும் கூறப்பட்டது.

குறளரசன் நபீலா அகமது என்கிற பெண்ணை வரும் 26ம் தேதி நிக்காஹ் செய்ய உள்ளார். அதன் பிறகு 29ம் தேதி அவர்களின் திருமண வரவேற்பு சென்னையில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற உள்ளது. திருமண வரவேற்பு பத்திரிகை வெளியாகியுள்ளது.

இயக்குநர்-இசையமைப்பாளர்-நடிகர்-சகோதரர் விஜய.T. ராஜேந்தர் அவர்கள், எனது இல்லத்தில் மகன் குறளரசன் அவர்களின் திருமண அழைப்பிதழை வழங்கினார். திரையுலகில் இருவரும் இணைந்து பயணித்த நாட்களை நினைவுகூர்ந்தோம்.
குறளரசன் இல்லறம் சிறக்க எனது வாழ்த்துக்கள்.#டிராஜேந்தர் |#சிம்பு | #குறளரசன் pic.twitter.com/8fxPyOocc3— Vijayakant (@iVijayakant) April 5, 2019

அழைப்பிதழ்

டி. ராஜேந்தர் தனது இளைய மகன் குறளரசனுடன் தேமுதிக தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு சென்று திருமண அழைப்பிதழை அளித்தார். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களை விஜயகாந்த் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.

இஸ்லாம்

குறளரசன் இஸ்லாமிய பெண்ணை திருமணம் செய்யத் தான் கடந்த பிப்ரவரி மாதம் மதம் மாறினார் என்று விமர்சிக்கிறார்கள். மதம் மாறுவது அவரது தனிப்பட்ட விஷயம் என்பது குறிப்பிடத்தக்கது. சிம்பு, நயன்தாரா நடித்த இது நம்ம ஆளு படத்திற்கு இசையமைத்தார் குறளரசன். தொடர்ந்து அவர் இசையமைப்பாளராக இருக்க விரும்புகிறார். குறளரசன் மதம் மாறியதில் அவரின் பெற்றோருக்கு வருத்தம் இல்லை. மகனின் விருப்பமே தங்களின் விருப்பம் என்று ஏற்றுக் கொண்டுள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleகண்ணீருடன் ஈழத்தில் கால் வைத்த யாழ். வாரிசு சின்மயி! கதறி அழும் குடும்பம்! நெகிழ்ச்சியின் உச்சத்தில் பார்வையாளர்கள்!
Next articleபிரசவத்திற்கு வந்த சிறுமியின் வயதை கேட்டு அதிர்ச்சியடைந்த மருத்துவர்கள்! நெஞ்சை உருக வைக்கும் பின்னணி!