மூக்கைச் சுற்றி சொரசொரவென்று அசிங்கமாக இருக்கும் வெள்ளைப்புள்ளிகளைப் போக்க சில வழிகள்!

0

மூக்கைச் சுற்றி சொரசொரவென்று அசிங்கமாக இருக்கும் வெள்ளைப்புள்ளிகளைப் போக்க சில வழிகள்.

பலருக்கு மூக்கைச் சுற்றி சொரசொரவென்று வெள்ளைப்புள்ளிகள் இருக்கும். இது அனைத்து வயது பெண்கள் மற்றும் ஆண்கள் சந்திக்கும் ஓர் பொதுவான பிரச்சனை தான். வெள்ளைப்புள்ளிகள் இருந்தால், அது அசிங்கமான தோற்றத்தைக் கொடுப்பதோடு, சருமத்தின் மென்மையைப் பாதிக்கும்.

தற்போது இந்த வெள்ளைப்புள்ளிகளைப் போக்குவதற்கு ஏராளமான அழகு சாதனப் பொருட்கள் மார்கெட்டுகளில் கிடைக்கிறது. இருப்பினும் அவற்றில் சில தான் நன்கு செயல்படுகின்றன. ஆனால் இவற்றால் கடுமையான வலியை சந்திக்கக்கூடும்.

எனவே பெண்கள் இயற்கை வழிகளின் மூலம் தங்கள் மூக்கைச் சுற்றியுள்ள வெள்ளைப்புள்ளிகளைப் போக்க விரும்புகின்றனர். இதற்காக வெள்ளைப்புள்ளிகளைப் போக்கும் வழிகளையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். மேலும் இயற்கை வழிகளின் மூலம் ஒருவர் தங்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டால், எவ்வித பக்கவிளைவுகளும் இல்லாமலும், வலியின்றியும் தீர்வு காண முடியும்.

அதிலும் நம் வீட்டுச் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே எளிய முறையில் வெள்ளைப்புள்ளி பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம். இக்கட்டுரையில் வெள்ளைப்புள்ளிகளைப் போக்கும் சில எளிய இயற்கை வழிகள் கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபேஸ் பேக் 1: ஓட்ஸ் மற்றும் தயிர்

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் – 1 டீஸ்பூன்

தயிர் – 2 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

-ஒரு பௌலில் ஓட்ஸ் மற்றும் தயிர் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

-பின் அதை வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

-பின்பு வெதுவெதுப்பான நீர் பயன்படுத்தி, அப்பகுதியை மென்மையாக ஸ்கரப் செய்து கழுவ வேண்டும்.

-இந்த மாஸ்க்கை வாரத்திற்கு 2 முறை பயன்படுத்தினால், வெள்ளைப்புள்ளிகள் வருவதைத் தடுக்கலாம்.

ஃபேஸ் பேக் 2 : தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு

தேவையான பொருட்கள்:

தக்காளி சாறு – 1 டீஸ்பூன்

எலுமிச்சை சாறு – 1/2 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

-ஒரு சிறிய கிண்ணத்தில் மேலே கொடுக்கப்பட்டுள்ள இரண்டு பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ள வேண்டும்.

-பின் அதை முகத்தில் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.

-பின்பு கிளின்சர் பயன்படுத்தி, நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

-இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தி வந்தால், வெள்ளைப்புள்ளிகள் வராமல் தடுக்கலாம்.

ஃபேஸ் பேக் 3 : க்ரீன் டீ மற்றும் கடலை மாவு

தேவையான பொருட்கள்:

க்ரீன் டீ – 1 டீஸ்பூன்

கடலை மாவு – 1/2 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

-ஒரு பௌலில் கடலை மாவு மற்றும் க்ரீன் டீயை ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

-பின் அந்த கலவையை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக ஸ்கரப் செய்து, 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

-பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

-இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

ஃபேஸ் பேக் 4 : விட்ச் ஹாசில் மற்றும் தேன்
தேவையான பொருட்கள்:

விட்ச் ஹாசில் – 4-5 துளிகள்

தேன் – 1 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

-ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள 2 பொருட்களையும் ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.

-பின் அதை பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி சிறிது நேரம் மென்மையாக மசாஜ் செய்யுங்கள்.

-பின்பு 5-10 நிமிடம் நன்கு ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் கழுவுங்கள்.

-இந்த செயலை வாரத்திற்கு 2 முறை செய்து வந்தால், வெள்ளைப்புள்ளிகள் வராமல் தடுக்கலாம்.

ஃபேஸ் பேக் 5 : வைட்டமின் ஈ ஆயில் மற்றும் டீ-ட்ரீ ஆயில்
தேவையான பொருட்கள்:

வைட்டமின் ஈ கேப்ஸ்யூல் – 1

டீ-ட்ரீ ஆயில் – 3-4 துளிகள்

பயன்படுத்தும் முறை:

-முதலில் ஒரு பௌலில் வைட்டமின் ஈ கேப்ஸ்யூலில் உள்ள எண்ணெயை எடுத்துக் கொள்ள வேண்டும்.

-பின் அதில் டீ-ட்ரீ ஆயில் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

-பின்பு நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

-இந்த செயலை ஒருவர் மாதத்திற்கு 2 முறை செய்து வந்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.

ஃபேஸ் பேக் 6 : சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர்

தேவையான பொருட்கள்:

சந்தன பவுடர் – 1/2 டீஸ்பூன்

ரோஸ் வாட்டர் – 2 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

-ஒரு பௌலில் சந்தன பவுடர் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.

-பின் அதை முகத்தில் வெள்ளைப்புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி 10-15 நிமிடம் நன்கு காய வைக்க வேண்டும்.

-பின்பு வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

-இந்த மாஸ்க்கை ஒருவர் வாரத்திற்கு 2 முறை பயன்படுத்த நல்ல பலன் கிடைக்கும்.

ஃபேஸ் பேக் 7 : வெந்தயம் மற்றும் கற்றாழை

தேவையான பொருட்கள்:

வெந்தயம் – ஒரு கையளவு

கற்றாழை ஜெல் – 2 டீஸ்பூன்

பயன்படுத்தும் முறை:

-வெந்தயத்தை நீரில் 5-6 மணிநேரம் ஊற வைக்க வேண்டும்.

-பின் அதை நன்கு அரைத்து, அத்துடன் கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

-பின்பு அந்த கலவையை முகத்தில் தடவி 10 நிமிடம் நன்கு ஊற வைக்க வேண்டும்.

-இறுதியில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ வேண்டும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபைல்ஸ் என்னும் மூல நோய் குணமாக இயற்கை வைத்தியம்!
Next articleவெரிகோஸ் வெயின் எனும் நரம்புச்சுருட்டலை குணப்படுத்த பச்சை தக்காளியுடன் தேன்! செய்முறை பதிவு!