முடி பிரச்சினை யாருக்கு தான் இல்லை. எதிர் வீட்டில இருக்கு, பக்கத்து விட்டில இருக்கு, மேல் வீட்டுல இருக்கு, கீழ் வீட்டில இருக்கு…அட! நம்ம வீட்டுலையும் இருக்கும் தாங்க. இப்படி கேலியாக நாம் இதை பேசினாலும் உண்மையில் முடி சார்ந்த பிரச்சினை மிகவும் வேதனைக்குரிய ஒன்று தான். முடி பிரச்சினைகளை தீர்க்க பல வழிகள் இருக்கின்ற.
ஆனால், ஒரு சில இயற்கை வைத்தியங்கள் மட்டுமே நமக்கு கை கொடுக்கும். அதுவும் அந்த காலத்தில் நம் முன்னோர்கள் கடைபிடித்த சில முக்கிய வழிமுறைகள் சிறப்பான முறையில் நமக்கு உதவும். அந்த வகையில் முடிகள் கொட்டி வழுக்கையாக உள்ள இடத்தில் மிக எளிதில் நம்மால் முடி வளர வைக்க முடியும். இதற்கு கழுதை பால் ஒன்றே போதும்! இது அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டள்ளது. கழுத்தை பாலை இந்த பதிவில் கூறுவது போல ஒரு வகை எண்ணெய்யோடு சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தாலே போதும்
என்னடா கழுதை பாலை வைத்து முடியை வளர வைக்க முடியுமா? என்கிற உங்களின் கேள்விக்கு விடை “ஆம்” என்பதே. அதுவும் வழுக்கை விழுந்த இடத்தில் மிக எளிதில் நம்மால் முடியை வளர வைக்க இயலும். இந்த அற்புத தன்மைக்கு காரணம் இந்த பாலில் உள்ள காசின், லாக்டோஸ், வைட்டமின் பி2, பி6 போன்றவை தான்.
பேரழகி கிளியோபாட்ரா அவர்கள் கூட தனது அழகை மேம்படுத்த எப்போதுமே கழுதை பாலில் தான் குளிப்பார்களாம். இதனால் தான் இதனை ஆண்டுகளாக அழகுக்கே சிறந்த உதாரணமாக பேசப்பட்டு வருகின்றனர். இவரின் அழகை பார்த்து வியக்கும் அனைவருக்கும் கழுதை பாலின் மகிமையை பற்றி தெரிந்திருக்க வாய்ப்புகள் உண்டு.
நீண்ட நாள் இளமையாக இருக்க வேண்டுமென்றால் அதற்கு சிறந்த மருந்தாக கழுதை பால் இருக்கும். இதனை இவ்வாறு பயன்படுத்தினால் முகம் என்றுமே இளமையாகவே இருக்குமாம்.
தேவையான பொருட்கள்.
கழுத்தை பால் 2 ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் 1 ஸ்பூன்
முதலில் ஆமணக்கு எண்ணெய்யை கழுத்தை பாலுடன் கலந்து முகத்தில் தடவவும். 20 நிமிடம் கழித்து முகத்தை வெது வெதுப்பான நீரில் அலசலாம். இதனை குளிப்பதற்கு முன் செய்து வந்தால் சிறந்தது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் இளமையை இழக்காமல் இருக்க முடியும்.
முடி கொஞ்சம் கொஞ்சமாக ஆரம்பத்தில் கொட்ட தொடங்கி,பின் முழுவதுமாக கொட்டினால் அது தான் வழுக்கையாக மாறும். இதனை சரி செய்ய
தேவையான பொருட்கள்.
ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன்
கழுதை பால் 4 ஸ்பூன்
கழுதை பாலில் ஆமணக்கு எண்ணெய்யை கலந்து முடியின் அடிவேரில் தடவவும். 20 நிமிடத்திற்கு பின் தலையை நீரால் அலசலாம் அல்லது சிகைக்காய் பயன்படுத்தி அலசலாம். இவ்வாறு வாரத்திற்கு 1 முறை செய்து வந்தால் இழந்த முடியை மீண்டும் பெற்று விடலாம்.
முடியின் வளர்ச்சியை அதிகரிக்க கழுதை பால் முக்கிய காரணமாக இருந்தாலும் ஆமணக்கு எண்ணெய் இவற்றுடன் சேரும் போது இயற்பியல் வினை புரிகிறது. எந்தவித கெமிக்கல்ஸ்களும் சேர்க்காத இந்த கலவையை தொடர்ந்து பயன்படுத்தும் போது தலையில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். இதனால் வேக வேகமாக முடி வளர தொடங்கும்.