தொழிற்நுட்ப வளர்ச்சி விண்ணை தொட்டாலும், இன்றும் நாம் மருத்துவர்களை கடவுளாக தான் பார்க்கின்றோம். ஒரு உயிரை மீட்டெடுக்கும் கர்வமான வேலையை செய்து வருபவர்கள் மருத்துவர்கள். முன்பெல்லாம் மருத்துவர்களை மிகவும் கண்ணியத்துடன் நாம் பார்ப்போம். ஆனால், இன்றைய கால கட்டத்தில் இது அப்படியே தலை கீழாக மாறியுள்ளது.
மருத்துவமனைக்கு சென்றாலே இல்லாத நோய்களை இருக்கு என்று சொல்லி, பணத்தை மொத்தமாக நம்மிடம் வாங்கி விடுவார்களோ என்கிற அச்சம் பலருக்கும் இன்றுள்ளது. இதை கூறும் போது ரமணா படத்தில் விஜயகாந்த் அவர்கள் செய்த அந்த நிகழ்வு தான் நினைவுக்கு வரும். இதே நிகழ்வுகள் பலரின் வாழ்க்கையிலும் இன்றும் நடந்து வர கூடும். மருத்துவமனைக்கு சென்றால் நம்பிக்கைக்குரிய மருத்துவர் இருப்பாரா என்பதே பலரின் அச்சத்திற்கு காரணம். இதில் அறுவை சிகிச்சை தான் மோசமான தாக்கத்தை மக்களிடம் கொண்டு வந்துள்ளது. பொதுவாக மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்யும் போது சில விஷயங்களை மறைத்து விடுவார்கள். அவை என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
நாம் அதிக நம்பிக்கை வைத்து அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம் என்கிற எண்ணத்தில் இதற்கு ஒத்து கொள்வோம். ஆனால், ஒரு சில மருத்துவர்கள் அறுவை சிகிச்சையில் பல தோல்விகளை கண்டிருப்பார்கள். இதை மருத்துவமனைகளும், அறுவை சிகிச்சை மருத்துவர்களும் ஒரு போதும் வெளிப்படுத்த மாட்டார்கள்.
பல மருத்துவமனைகள் போலித்தனமாகவே இந்த அறுவை சிகிச்சையை மாற்றி விட்டனர். அதாவது, மிக எளிதில் தீர்க்க வேண்டிய நோய்களை கூட அறுவை சிகிச்சை செய்தால் தான் குணமாகும் என கூறி, பணத்தை நம்மிடம் இருந்து கறந்து விடுவார்கள். இதில் சில நேரங்களில் மரணம் கூட நேரலாம்.
சில மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்ய ஆளில்லை என்பதற்காக ஆரம்ப கால மருத்துவர்களை வைத்து சிகிச்சை செய்கின்றனர். இது மிக மோசமான பாதிப்பை உண்டாக்கும். இது போன்ற நிலையை ஒரு போதும் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் வெளிப்படுத்த மாட்டார்கள்.
சில மருத்துவமனைகளில் புதுவித அறுவை சிகிச்சை எந்திரங்கள் வாங்கினால் அதை கூட உங்கள் மீது பரிசோதிக்க அதிக வாய்ப்புகள் உண்டு. இது போன்ற செயல்கள் பற்றி உங்களிடம் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் கூற வாய்ப்பே இல்லை.
சில அறுவை சிகிச்சை மருத்துவர்கள் மிகவும் திறமைசாலியாக இருப்பார்கள். ஆனால், எப்போதுமே அவர்கள் செய்யும் அறுவை சிகிச்சையை விட 10 மடங்கு பணத்தை கேட்பார்கள். இன்று இது போன்ற நிலை பலருக்கும் ஏற்படுகிறது. எதற்காக இவ்வளவு பணம் வாங்குகிறார்கள் என்பதை அறிய வேண்டியது நம் கடமையாகும்.
எப்போதும் ஒரே மருத்துவமனையை நாடாதீர்கள். ஒரு மருத்துவர் உங்களுக்கு மிக பெரிய நோய் இருக்கிறது என்று சொன்னால் அதை நினைத்து வருந்தாமல் மேலும் சில மருத்துவர்களிடம் பரிந்துரை கேளுங்கள். இது தான் உங்கள் உயிரை காப்பாற்றும் ஒரே வழி. ஏனெனில், உங்களின் இது போன்ற நிலையை பற்றி அறுவை சிகிச்சை மருத்துவர்கள் பலர் உண்மையை இப்போதெல்லாம் சொல்வதில்லை.
அர்ஜுன் ரெட்டி படத்தில் காட்டுவது போன்ற சில சம்பவங்கள் நிஜ வாழ்க்கையிலும் நடக்க கூடும். அதாவது, சில அறுவை சிகிச்சை மருத்துவர்கள் முன்னிரவிலோ அல்லது அறுவை சிகிச்சை செய்ய போகும் முன்னரோ இது போன்று குடித்து விட்டு அதனால் ஏற்படும் விபரீதத்தை எப்போதுமே உங்களிடம் இருந்து மறைத்து விடுவார்கள்.
அறுவை சிகிச்சை செய்யும் போது இதயம் சரியான அளவில் செயல்படுகிறதா? என்பதை அறுவை சிகிச்சையின் அவசரத்தில் சில சமயங்களில் தவறு நடக்க கூடும். இந்த நிலை உங்களுக்கு ஏற்பட்டால் மோசமானதுதான். இது போன்ற இதய பாதிப்பை உங்களிடம் பெரும்பாலும் மறைத்து விடுவார்கள்.
அறுவை சிகிச்சையில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அறுவை சிகிச்சை மருத்துவர்கள் இதை வெளியில் கூறவே மாட்டார்கள். இந்த நிலை இன்று பல மருத்துவமனைகளில் நடந்து வருவதை நாம் கண் கூடாகவே பார்க்கலாம்.
அறுவை சிகிச்சை நடக்கும் இடத்தில் என்னதான் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, அவர்கள் கூறும் குறிப்புகளை எழுதி வைத்திருக்கும் அந்த கையேடு தான் எல்லாவற்றிற்கும் பதிலாக இருக்கும். ஏனெனில், அறுவை சிகிச்சை மருத்துவர் செய்யும் ஒவ்வொரு செயலையும் இதில் தான் செவிலியர் ஒருவர் குறிப்பெடுத்து கொண்டே வருவார்.