Home thatstamil one india tamil oneindia tamil அதிர்ச்சியில் வாய் பிளக்கும் ரசிகர்கள்!வாழ்வு கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜோதிகா!

அதிர்ச்சியில் வாய் பிளக்கும் ரசிகர்கள்!வாழ்வு கொடுத்த நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க மறுத்த ஜோதிகா!

0
565

எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகா மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எஸ்.ஜே. சூர்யாவை வைத்து தமிழ்வாணன் இயக்கும் படம் உயர்ந்த மனிதன். இந்த படம் மூலம் கோலிவுட் வருகிறார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் துவங்க உள்ளது.

இந்நிலையில் இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஜோதிகாவிடம் கேட்க அவர் மறுத்துவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

எஸ்.ஜே. சூர்யா இயக்கிய வாலி படம் மூலம் தான் ஜோதிகா கோலிவுட் வந்தார். மேலும் அதே எஸ்.ஜே. சூர்யா இயக்கிய குஷி படம் ஜோதிகாவுக்கு பெரிய பெயர் வாங்கிக் கொடுத்தது.

இந்நிலையில் அவர் எஸ்.ஜே. சூர்யாவுடன் நடிக்க மறுத்துள்ளார் என்றால் நிச்சயம் ஏதாவது வெயிட்டான காரணம் இருக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, சினிமாவில் வாழ்வு கொடுத்தவர் படத்திலேயே நடிக்க மறுத்ததால் ரசிகர்களுக்கும் சற்று அதிர்ச்சியான தகவலாகவே உள்ளது.

Previous articleமூட்டு வலியை, சர்க்கரை வியாதி மற்றும் கொலஸ்ட்ரால் விரைவில் குணமாகும் ‘சோளக் கருது நாரில்’ தேநீர் தயாரிக்கும் முறை!
Next articleஆர்யாவின் திருமணம் குறித்து வெளியிட்ட உண்மை! ஆர்யா தான் வேண்டும் என அடம்பிடித்த அபர்ணதி!