தனது காதலனைக் கைவிட்டு வெளிநாட்டில் இருந்து வந்த இளைஞனைக் கலியாணம் கட்டியுள்ளார் பல்கலைக்கழக மாணவி. வடமராட்சியைச் சேர்ந்த குறித்த மாணவி யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்ற வேளையில் வவுனியாவைச் சேர்ந்த யாழ் பல்கலைக்கழக மாணவனைக் காதலித்து வந்துள்ளார். அத்துடன் அவனுடன் சேர்ந்து பல இடங்களுக்கும் சென்றுள்ளதுடன் அவனுடன் ஒன்றாக இருந்து அந்தக் காட்சிகளை காதலனை செல்பியும் எடுக்க அனுமதித்துள்ளார்.
இந் நிலையில் காதலனுடன் திடீரென மனக்கசப்பு ஏற்பட்டு மாணவி கடந்த வருடம் காதலனுடனான தொடர்புகளைத் துண்டித்ததாகத் தெரியவருகின்றது. பல மாதங்கள் காதலனுடனான தொடர்புகளைத் துண்டித்து அவன் சந்திக்க முயன்ற சமயங்களில் அவனை புறக்கணித்து வந்துள்ளார் மாணவி். இதனால் மாணவன் பல தடவை அவளது வீட்டுக்குச் சென்று பெற்றோருடன் கதைத்தும் முரண்பட்டுமுள்ளார். இதனால் பொலிசாரிடம் காதலன் தொடர்பாக முறையிட்டதால் பொலிசார் அவனை அச்சுறுத்தியதையடுத்து காதலன் மாணவியின் வீட்டுக்குச் செல்வதை தவிர்த்தார்.
கடந்த வருட இறுதியில் மாணவிக்கு பிரான்சில் இருந்து வந்த துாரத்து உறவுக்காரனான இளைஞனை மணம் முடிக்க பெற்றோர் முடிவு செய்திருந்தனர். இது காதலனுக்கு தெரியாது ரகசியமாக நடந்துள்ளது. கடந்த சில வாரமே இவர்களின் நிச்சயதார்த்தம் தொடர்பாக காதலன் அறிந்துள்ளான். அத்துடன் காதலியின் உறவுக்கார நண்பியூடாக மாப்பிளையின் தொலைபேசி இலக்கத்தை அறிந்து மாப்பிளையை நேரில் சந்தித்து தனக்கும் மாணவிக்கும் இடையில் உள்ள தொடர்பு தொடர்பாகவும் அவளுடன் அந்தரங்கமாக இருந்த விடயங்களையும் காதலன் கூறியுள்ளான். ஆனால் மாப்பிளை அதனைச் சாதாரணமாக எடுத்துக் கொண்டு இது தொடர்பாக மாணவி எற்கனவே எனக்கு எல்லா விடயத்தையும் தெரிவித்துவிட்டார் என கூறியதால் ஆத்திரமடைந்த மாணவன் பிரான்சில் இருந்து வந்த மாப்பிளையைத் தாக்க முற்பட்டுள்ளார். இதனையடுத்து அங்கு நின்ற மாப்பிளையின் உறவுக்காரர்களால் மாணவன் நையப்புடைக்கப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
கடந்த வியாழக்கிழமை யாழில் உள்ள பிரபல மண்டபத்தில் மாணவிக்கும் பிரான்ஸ் இளைஞனுக்கும் திருமணம் நடந்துள்ளது. திருமண மண்டபத்திலும் மாணவன் சென்று குழப்பம் விளைவிக்க முயன்று அங்கிருந்தவர்களால் அகற்றப்பட்டுள்ளார். அத்துடன் பொலிசாரிடமும் மாணவன் தொடர்பாக முறைப்பாடு செய்யப்பட்டு பொலிசாரால் விசாரிக்கப்பட்டதுடன் மாணவன் வைத்திருந்த அந்தரங்க புகைப்படங்களும் குறித்த மாணவனிடம் இருந்து கைப்பற்றப்பட்டதாக பொலிஸ் தரப்பில் இருந்து தெரியவருகின்றது.
இதே வேளை குறித்த மாணவனை நீதிமன்றத்தில் ஆயர்ப்படுத்த பொலிசார் முயன்ற வேளையில் மாப்பிளை வீட்டார் அதை தடுத்து நிறுத்தியுள்ளதாகவும் பொலிஸ் தரப்புத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாணவன் அவனது உறவுக்கார குடும்பப் பெண் ஒருவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தமையையும் இதனை அறிந்த மாணவி குறித்த குடும்பப் பெண்ணை தொடர்பு கொண்டு கதைத்ததை அறிந்த மாணவன் காதலியான மாணவியை கடுமையாகத் தாக்கியதன் பின்னரே, மாணவி குறித்த மாணவனை வெறுக்க காரணமாக இருந்ததாக மாணவியின் நண்பிகள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை மாணவன் குறித்த மாணவியுடன் தான் இருந்த அந்தரங்க புகைப்படங்களை சில ஊடகவியலாளர்களுக்கு கொடுத்துள்ளதாகவும் காதலியின் கலியாணம் நடக்கும் திருமண மண்டபத்தில் தான் தற்கொலை செய்யவுள்ளதாகவும் ஊடகவியலார்கள் சிலருக்கு தகவல் கொடுத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



