மரு, கட்டியை குணப்படுத்தும் இரணகள்ளி!

0

* இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அந்த சாற்றில் இரு துளி வென்னீரில் கலந்து உள்ளுக்குக் கொடுத்த பின்னர், தேள் கொட்டின கடிவாயில் மேல்படி இலையை அரைத்து வைத்துக் கட்டி விட தேள்கடி நஞ்சு இறங்கப் போகும்.

* இரணக்கள்ளி இலைக்கு இரணத்தை ஆற்றும் சக்தியுண்டு. இந்த இலையை மை போல் அரைத்து, அறாத இரணத்தின் மேல் வைத்து அதன் மேல் ஒரு வெற்றிலையை வைத்துக் கட்டி வந்தால், நாளவட்டத்தில் படிப்படியாக இரணம் ஆறும்.

* இரணகள்ளிச் சாற்றை மரு, பாலுண்ணி, கால் ஆணி, சொற சொறப்பான மருக்கள் பேரில் இரவில் தடவி வைத்துக் காலையில் கழுவி விடவேண்டும். இந்த விதமாக தினசரி, பாலுண்ணி, மரு மறையும் வரைத் தடவி வர வேண்டும்.

* இரணக் கள்ளி இலையை இடித்துச் சாறு பிழிந்து அரைக் கிலோ பசு வெண்ணையுடன் 500 மில்லி சாறு சேர்த்து நெய் காய்ச்சி எடுதுக்கொண்டு, அந்த நெய்யை பிரண்டைத் துவையல் சோற்றுடன் கலந்து அதில் மேல்படி நெய்யை உருக்கி ஊற்றிப் பிசைந்து பகல் உணவில் மட்டும் சாப்பிட்டுவர குன்ம நோய், அசீரணம், வயிற்றில் ரணம், வாயுத்தொல்லை, மற்றும் சிறுகுடல், இரைப்பை, பெருங்குடல் ஆகியவைகளில் காணும் எல்லாவித புண், ரணம், அழிற்சி யாவும் ஆறிப்போகும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபெண்களின் கவனத்துக்கு! உடலுக்கு தேவையான முக்கிய சத்து!
Next articleவீட்டின் படுக்கை அறையில் இவற்றை எல்லாம் வைக்காதீர்கள்!