பிரித்தானியாவில் பெண்மணி ஒருவர் சிறுவயது முதல் தனது அண்ணனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி அதிலிருந்து மீண்டு வந்ததை பகிர்ந்துள்ளார்.
ஒலியா என்ற பெண்மணி பகிர்ந்துகொண்டதாவது, எனக்கு 3 வயது இருக்கும்போது எனது அண்ணனுக்கு 6 வயது. 3 வயதிலேயே எனக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தான்.
இந்த பாலியல் தொந்தரவு எனது 18 வயது வரை தொடர்ந்தது. அத்தனை ஆண்டுகளும் நரகத்தை பொறுத்துக்கொண்டு ஒரு பொய்யான வாழ்க்கை வாழ்ந்து வந்தேன்.
அண்ணனிடம் எனது கன்னித்தன்மையை இழந்ததை நினைத்து ஒவ்வொரு நாளும் வேதனை அடைந்தேன். இப்படி ஒரு பொய்யான வாழ்க்கைக்கு முடிவு கட்ட வேண்டும் என நினைத்து எனது தாயிடம் நடந்தவை அனைத்தையும் தெரிவித்தேன்.
எனது தாய் எனக்கு நம்பிக்கை அளிப்பாரா என்ற சந்தேகத்தில் நான் அவரிடம் அனைத்தையும் தெரிவித்தேன். இதனை கேட்டு துயரம் அடைந்த எனது தாய், தனது மகன் என்று கூட நினைக்காமல் அவனுக்கு தண்டனை வாங்கி கொடுக்க வேண்டும் என முடிவு செய்து பொலிசில் புகார் அளித்து, குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக நடைபெற்ற வழக்கு விசாரணையில் எனது அண்ணனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதன்பிறகு எனது அண்ணனுடனான தொடர்பை நானும் எனது அம்மாவும் துண்டித்துக்கொண்டோம்.
என்னைப்போன்று பிற பெண்களும் பாலியல் தொந்தரவுகளில் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக இதனை பகிர்ந்துள்ளேன் என கூறியுள்ளார்.