துபாயில் இருந்து லக்னோ வந்த ஏர் இந்திய விமானத்தில் புழுக்கம் தாங்க வில்லை என்று கூறி பயணி ஒருவர் ஆடைகளின்றி உலாவியது, சக பயணிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
IX-194 என்ற ஏர் இந்தியா விமானம் ஒன்று, 150 பயணிகளுடன் துபாயில் இருந்து லக்னோ நகரத்துக்கு புறப்பட்டது. பயணிகள் அனைவரும் அமைதியாக அமர்ந்திருக்க பயணி ஒருவர் நடந்து கொண்ட விதம் அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருக்கும் போது அதில் இருந்த ஆண் பயணி ஒருவர் திடீரென எழுந்தார். தாம் அணிந்திருந்த ஆடைகளை கழற்றி வீசி விட்டு உலாவ ஆரம்பித்துவிட்டார். சுற்றியிருந்த மற்ற பயணிகள் அவரின் செய்கையால் ஒரு கணம் அதிர்ந்தனர்.
பயணிகளின் கூச்சல் மற்றும் களேரபரத்தை அறிந்த விமானிகள் குழு உடனடியாக அங்கு வந்தது. அந்த ஆண் பயணியை அமுக்கி பிடித்தனர். அவரின் செய்கையால் அதிர்ந்த விமானிகள் தரப்பினர் விசாரணை நடத்தினர். விமானத்தில் புழுக்கம் தாங்காததால் ஆடைகளை கழற்றி அட்டகாசம் செய்ததாக அவர் கூறியுள்ளார்.
பயண நேரம் முழுக்க அவரை எங்கும் நகர விடாமல் பிடித்து வைத்திருந்த விமானிகள் குழு, பிற்பாடு விமானம் தரையிறங்கிய போது லக்னோ விமான நிலைய பொலிசாரிடம் ஒப்படைத்தனர். விமானத்தில் முறையின்றி நடந்து கொண்ட அந்த நபர் யார், பெயர் விவரங்களை தெரிவிக்க விமான நிறுவனத்தினர் மறுத்துவிட்டனர்.