தொப்பையே இல்லாமல் ஜப்பானியர்கள் இப்படி ஒல்லியாகவும், அதிக ஆயுளுடன் இருக்க காரணம் என்ன? நீங்களும் பின்பற்றுங்கள்!

0

பொதுவாகவே ஜப்பானியர்கள் பார்ப்பதற்கு அதிக இளமையுடனும், ஒல்லியாகவும் 40 வயதுடையவரை பார்த்தால் 25 வயது உள்ளவரை போன்றும், 30 வயதுடையவரை பார்த்தால் 18 வயது உள்ளவரை போன்றும் தோற்றம் கொண்டிருப்பதற்கான பிரதான காரமாக அவர்கள் சாப்பிட கூடிய உணவுகளும், உணவு முறையும் காணப்படுகின்றது.

ஏனெனில், ஜப்பானியர்கள் சுறுசுறுப்பாகவும், ஒல்லியாகவும் என்றுமே இருக்க ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவாக இருக்க வேண்டும் என்பதனால் நொறுக்கு தீனி, இனிப்பு வகை உணவுகளையெல்லாம் அதிக அளவில் சாப்பிடாது பெரிதும் தவிர்த்து விடுவதுடன், சிவப்பு பீன்ஸ்களை இவர்கள் ஸ்னாக்காக சாப்பிடுவார்களாம்.

சமையல் முறை

உணவுகளை மெல்ல கொதிக்க வைத்தோ, வறுத்தோ, ஆவி காட்டியோ மிக குறைந்த அளவு எண்ணெய் பயன்படுத்தி சமைத்து சாப்பிடுவதுடன், எல்லாவித காய்கறிகளையும் பொடிசாக நறுக்கிய இவர்கள் சமைப்பதுடன், மிதமான அளவில் தான் காரத்தை சேர்த்து கொள்வார்களாம். மேலும், ஜப்பானியர்களும் நம்மை போன்றே அரிசியை முதன்மை உணவாக சாப்பிடும் பழக்கம் கொண்டிருப்பதனால், சாப்பிட்டில் சிறு பங்கு வேக வைத்த அரிசி உணவுகள் சேர்த்திருப்பினும் இதில் உப்போ அல்லது வெண்ணெய்யையோ சேர்க்க மாட்டார்கள.; எவ்வாறாயினும், காலை உணவில் மீன், அரிசி, சூப், கடற்களைகள், ஆம்லெட்ஸ் என வகை வகையான உணவுகளை சேர்த்து அதிக அளவில் இவர்கள் உண்பார்கள்.

சாப்பிடும் முறை

இவர்கள் சாப்பிடுவதற்கென்று சில பாரம்பரிய விஷயங்களை கடைபிடித்து வருகின்றனர். சாப்பிடும் போது ஒவ்வொரு துண்டையும் மெல்ல சுவைத்து சாப்பிடுதல், செயற்கை இனிப்பூட்டிகளையோ சுவையூட்டிகளையோ இவர்கள் பெரும்பாலும் சேர்க்காதிருத்தல், சோடாக்கள் நிறைந்த பானங்களை முற்றிலுமாக இவர்கள் தவிர்த்தல், மீன், கடற்களைகள், சோயா, கிரீன் டீ, காய்கறிகள், பழ வகைகள் பெருமளவில் உணவில் சேர்த்தல் மற்றும் சுஷி என சொல்லப்படும் உணவு வகையை அதிகம் விரும்பி சாப்பிடுவார்கள்.

நடைபயிற்சி

ஜிம்மிற்க்கோ, உடற்பயிற்சி செய்வதற்கோ செல்வதற்கு கூட நேரமற்ற நிலையிலும், பள்ளி அல்லது அலுவலகத்திற்கு காலாலே பெரும்பாலும் நடந்து செல்வார்கள்.

இதனைவிட, கண்ட நேரத்தில் கண்ட உணவுகளையெல்லாம் சாப்பிடுவதனை தவிர்த்து, எப்போதும் குறைந்த கலோரிகள் உள்ள உணவுகளையே விரும்பித் தெரிந்து சாப்பிடுவார்கள்.

இந்த இரண்டு பழங்களை மட்டும் எப்போதும் ஒன்றாக சேர்த்து சாப்பிடாதீர்கள் மரணத்தை கூட விளைவிக்குமாம்..!

By: Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசீன ராஜாக்கள் இந்த பழத்தை தான் ராணிகளுக்கு கொடுப்பாங்களாம்! ரகசியம் என்ன‌ தெரியுமா?
Next articleஇன்றைய ராசிப்பலன் – 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை !