குழந்தை உருவாதல் என்பது மிக்க மகிழ்ச்சியான விடயமொன்றாக காணப்படுகின்ற போதிலம், சில சமயங்களில் குழந்தை உருவாக்கத்தை கட்டுப்படுத்துவதும் அவசியமானதாக காணப்படுகின்ற வகையில், குழந்தை உருவாக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையையே பொதுவாக பிறப்புக் கட்டுப்பாடு அல்லது கருத்தடை என்று கூறுவர்.
காண்டம், மாத்திரைகள் உட்கொள்ளல், ஊசிகள் போட்டுக்கொள்ளுதல் என பல்வேறு மருத்துவ முறைகள் பிறப்புக் கட்டுப்பாட்டிற்கு உதவி வந்தாலும், பிறப்புக் கட்டுப்பாட்டை மேற்கொள்ள ஏதேனும் இயற்கை வழிமுறைகள் உள்ளனவா என்று நம் மனம் ஒரு தேடலை மேற்கொள்ளத்தான் செய்கிறது. அந்தவகையில், பிறப்புக் கட்டுப்பாட்டிற்கு உதவும் சில ஆயுர்வேத இயற்கை மூலிகைகள் பற்றி நோக்குவோம்.
Wild carrot அதாவது காட்டு கேரட் விதைகளை உட்கொள்ளும் போது புரோஜெஸ்டெரோனை தடை செய்து, கருத்தடையை ஊக்குவிக்கிறது. இது ஒரு மிகச்சிறந்த இயற்கை கருத்தடை சாதனமாக காணப்படுகின்ற போதிலும், இதனை உட்கொள்வதனால் மலச்சிக்கல் ஏற்பட முடிவதுடன், சிறுநீரக மற்றும் பித்தப்பைக்கல் கோளாறு கொண்டவர்கள் மற்றும் தாய்ப்பாலூட்டும் பெண்களுக்கு ஏற்றதல்ல.
மேலும், புதினா வகையை சேர்ந்த ஒருவகை மூலிகையான பென்னிராயலை உட்கொள்ளும் போது மாதவிடாய் ஹார்மோன்களை தூண்டி, மாதவிடாயை ஏற்படுத்தி கருவினை கலைத்துவிடுகிறது. மேலும், இச்செடியின் புதிய மற்றும் காய்ந்த இலைகளை உட்கொள்வது கருத்தடை ஏற்பட உதவுவதுடன்; இதில் தேநீர் தயாரித்தும் பருகமுடியும்.
ஆமணக்கு விதைகளை உடைக்கும் போது உள்ளே தென்படும் ஒரு சிறிய வெள்ளை நிற பருப்பினை தம்பதியர் உண்ணுதல், மருத்துவ வேப்ப எண்ணெயை கருப்பை மற்றும் பெலோப்பியன் குழாய் இணையுமிடத்தில் செலுத்தினால், அது எவ்வித பக்கவிளைவையும் ஏற்படுத்தாமல், ஒரு வருட காலத்திற்கு கருத்தடையை ஏற்படுத்துவதாக சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், கருவை உண்டாக்கும் கருமுட்டைகளை வேம்பு 30 நொடிகளில் கொன்று உடனடி கருத்தடையை ஏற்படுத்துகிறது. எனினும் இது மாதவிடாய் சுழற்சியை பாதிப்பதில்லை.
இயற்கை முறையில் கருத்தடையை அடைய விரும்பும் தம்பதியர் செம்பருத்தி இலைகளை ஸ்டார்ச் சேர்த்து அரைத்து உட்கொண்டால் கருத்தடை ஏற்படும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், காய்ந்த புதினா இலைகளை பொடி செய்து வைத்து மிதமான சூட்டில் கொதிநீரில் இந்த பொடியை சேர்த்து பருகும் போது, இதை ஆணும் பெண்ணும் பருகலாம்; உடலுக்கும் நல்லது தான். மேலும், ப்ளூ கோஹோஸ் தாவரத்தின் வேரினை உட்கொள்ளும் போது ஆக்சிடோசின் மற்றும் காலோசபோனின் எனும் இரண்டு வித ஹார்மோன்களை வெளிவிட்டு கருப்பையை சுருங்கச் செய்து, கருத்தடையை ஏற்படுத்த உதவுகிறது.
மேற்கூறிய அனைத்து மூலிகை வகைகளையும் மாதவிடாய் நாட்களின் முதல் நாளன்று உட்கொண்டால், அடுத்த ஒரு மாதத்திற்கு கருத்தரிப்பு ஏற்படாது என்று கூறப்படுகின்றதுடன், கருத்தடை அல்லது பிறப்புக் கட்டுப்பாடு மேற்கொள்ள இயற்கை மூலிகைகளை சரியாக பயன்படுத்தல் அவசியம்; என்ற வகையிலும், உங்கள் உடல் தன்மைக்கு நீங்கள் எடுத்துக் கொள்ளப்போகும் மூலிகையோ அல்லது மருந்தோ ஒத்துக் கொள்ளுமா என்று பரிசோதனை செய்த பின் உட்கொள்ளல் நல்லது என்ற வகையிலும் ஒரு முறை மருத்துவரை கலந்தாலோசித்து உட்கொள்வது நல்லது.
By: Tamilpiththan