தேவையற்ற தொப்பையினைக் குறைப்பதற்கான தெரிந்தெடுக்கப்பட்ட சில எளிய வழிகள் இதோ!
கிரீன் டீயும் புதினா
கிரீன் டீயுடன் எலுமிச்சையும் புதினாவும் சேர்த்துப் பருகும் போது, அது பாலிபினைல் மற்றும் பெக்டின் அளவினைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து உடல் எடையை மிக வேகமாகக் குறைக்கச் செய்கின்றது.
அவகேடாவும் கோதுமை பிரட்டும்
அவகேடா பழத்தை தோல் நீக்கிவிட்டு நன்கு மசித்து அதில் சிறிதளவு மிளகாயும் உப்பும் எலுமிச்சையும் சுவைக்காக சேர்த்துக் கொண்டு அதை பிரட்டில் டோஸ்ட்டாக தடவி சாப்பிட்டு வரும் போது உடல் எடையில் நல்ல மாற்றம் தென்படும்.
ஆப்பிள் – பீநட் பட்டர் – பட்டை
ஆப்பிளில் உள்ள வைட்டமின்களும் மினரல்களும் ஆண்டி ஆக்சிடண்ட்டுகளும் பீநட் பட்டருடன் சேர்ந்து உடலுக்குத் தேவையான ஆற்றலைக் கொடுப்பதுடன், மிகக் குறைந்த கலோரியில் வயிறு நிறைந்த உணர்வை ஏற்படுத்தி, உடலின் நிறையினைக் கட்டுப்பாட்டுக்குள் பேணும்.
சிக்கனும் மிளகாயும்
மிளகாயில் உள்ள ஆண்டி ஆக்சிடணட்டுகள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுவதுடன், மெட்டபாலிசத்தை துரிதப்படுத்தி உடலில் உள்ள கொழுப்பை எரிப்பதனால், சிக்கன் பிரஸ்ட்டில் நல்ல மிளகாயை அரைத்த மசாலாவும் உப்பும் எலுமிச்சை சாறும் சேர்த்து ரோஸ்ட் செய்து சாப்பிட்டு வரும் போது உடலில் உள்ள கொழுப்புகள் குறைந்து தொப்பை நீங்கும்.