Home Patti Vaithiyam இந்த முத்திரையை செய்து பாருங்க! தூக்கமின்மை பிரச்சனை மட்டுமின்றி இந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்!

இந்த முத்திரையை செய்து பாருங்க! தூக்கமின்மை பிரச்சனை மட்டுமின்றி இந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்!

0
4684

இந்த முத்திரையை செய்து பாருங்க! தூக்கமின்மை பிரச்சனை மட்டுமின்றி இந்த பிரச்சனைகளும் தீர்ந்துவிடும்!

இரவில் தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுபவரா நீங்கள்? அப்படியானால், நீங்கள் உங்கள் கட்டை விரலை மடக்கி, நடுவிரலின் அடியில் வைத்து, நடுவிரல் மற்றும் ஆள்காட்டி விரலால் கட்டை விரலைச் சுற்றிப் பிடித்தல் வேண்டும். இதன்போது உங்கள் மோதிர விரல் மற்றும் சுண்டு விரல் என்பன நீட்டி இருத்தல் அவசியமாகும்.

இதன்பின்னர், இரண்டு கைகளும் ஒன்றோடு ஒன்று ஒட்டுமாறு வைத்து சப்பளங்கால் இட்டு அமர்ந்தோ அல்லது கால் தரையில் ஊன்றி இருப்பது போன்ற நிலையிலோ நெஞ்சுக்கு நேராகக் கைகளை வைத்து, நீட்டியிருக்கும் விரல்கள் மேல்நோக்கி இருக்குமாறு குறைந்தது 10 முதல் 20 நிமிடங்கள் வரை இந்த முத்திரையைச் செய்தல் அவசியாகும்.

இவ்வாறு செய்வதன் மூலம், வாயில் அளவுக்கு அதிகமாக உமிழ்நீர் ஊறுதலுக்கு சக்தி முத்திரை தீர்வாக அமைவதுடன், தூக்கமின்மை பிரச்சனை நீங்குவதுடன், சுவாசிக்கும் மூச்சு ஆழமாவதனால், நுரையீரல் பலம் பெற்று சளி, சுவாசத் தொந்தரவுகளம் ஆஸ்துமாவும் கட்டுப்படுவதுடன், தினமும் 10 நிமிடங்கள் சக்தி முத்திரையினைச் செய்துவரும் போது ஆண்களுக்கு, ப்ராஸ்டேட் வீக்கம் காரணமாக ஏற்படும் அடிக்கடி சிறுநீர் கழித்தல், சொட்டுச் சொட்டாக சிறுநீர் கசிதல் போன்ற பிரச்னைகள் நீங்கும்.

மேலும், மனம் மற்றும் உடல்சோர்வு நீக்கி, உடலுக்கு உடனடியான ஆற்றல் கிடைப்பதுடன், உடலில் ஏற்படும் இறுக்கம் மற்றும் உடல்வலி என்பன நீங்குவதுடன், உடல் வெப்பத்தால் அடிவயிறு இழுத்துப்பிடிப்பது, அடிஇடுப்புப் பகுதியிலான வலி போன்றனவும், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலிக்கு என்பனவற்றிற்கும் ஒரு சிறந்த தீர்வாக அமையும்.

Previous articleதேவையற்ற தொப்பையை வேகமாக குறைப்பதற்கான சில எளிய வழிகள் இதோ!
Next articleவெங்காயத்தை நாள்தோறும் பச்சையாக சாப்பிட்டால் நிகழும் அதிசயம்!