நீண்ட நாட்களாக இருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வது எப்படி!

0

நீண்ட நாட்களாக படிந்திருக்கும் கறைப் படிவங்களை சுத்தம் செய்வதற்கு மிகவும் சிரமப்படுகிறீர்களா? இதோ மிகவும் எளிதான வழிகள் சில உங்களுக்காக

வெது வெதுப்பான நீரில் பொட்டாசியம் பர்மாங்கனேட் எனும் வேதிப்பொருளை போட்டவுடன் அது ஊதா நிறமாக மாறும். அவ்வாறு ஊதா நிறமாக மாறிய துவர்ப்புத் தன்மை கொண்ட தண்ணீரை வாயில் ஊற்றி நன்றாக கொப்புளித்தலின் மூலம் நீண்ட நாட்களாக படிந்திருக்கும் கறைப் படிவங்களை சுத்தமகும். இங்க கவனிக்க வேண்டிய விடயம் யாதெனில், நீரில் இந்த வேதிப்பொருளை அதிகளவில் போடும் போது கரு ஊதா நிறமாக மாறுவதுடன் நீரின் துவர்ப்புத் தன்மையும் அதிகரித்து விடும். எனவே, கொஞ்சம் கொஞ்சமாக கொப்புளித்த பின்னர் பிரஷ் கொண்டு (பேஸ்ட் போடாமல்) சுத்தம் செய்யும் போது பல வருடங்களாக இருந்த கறைகள் பெயர்ந்து வெளியேறும் என்பது யாரும் மறுக்க முடியாத உண்மையாகும்.

அசிடிக் அமிலம் அதிகம் கலந்துள்ள உணவுபொருட்களை உண்பதால் பற்களில் கறை படிவதற்கான வாய்ப்புள்ளது. இந்தவகையில், சோடாக்களில் உள்ள சிட்ரிக் ஆசிட் பற்களின் எனாமலை (நுயெஅநட) கரைத்து விடுவதுடன், சோடாக்களில் உள்ள சக்கரை பற்களை சொத்தையாக்குவதோடு மட்டுமல்லாமல், பற்களிலும் கறை படிய வழிவகுக்கின்றது. அதே போன்று காபியில் உள்ள நிறம் பற்களில் தங்கி, அதன் வெண்மை நிறத்தை பாதிக்கின்றதனால் காபி குடித்த பின்னர் வாயை நன்றாக கொப்பளிப்பது நல்லது. இதனைவிட, தக்காளி சாஸ், பழச்சாறுகளான திராட்சை பெர்ரி பழங்களில், ரெட் ஒயின், சோயா பீன்ஸ், பீட்ரூட் போன்றவற்றில் அசிட்டிக் அமிலம் அதிகம் உள்ளதனால் இவை பற்களில் கறையை ஏற்படுத்தி விடுகின்றன.

இதனைவிட, பற்களில் உள்ள கறையை இயற்கை பொருட்களைப் பயன்படுத்தி நீக்கும் முறைமைகள் பற்றி நோக்குவோம். கல் உப்பை நன்கு பொடி செய்து அதனை தினமும் பற்களில் தேய்த்து வரும் போது கிருமிகள் தாக்குதல் நீங்குவதுடன், பற்களும் வெண்மையாகும். இரவு தூங்க செல்வதற்கு முன் ஆரஞ்சு பழ தோலை பற்களில் தேய்துவிட்டு, காலையில் கழுவும் போது பற்களில் படிந்துள்ள பாக்டீரியா நீங்கி பற்கள் வெளிச்சிடுவதுடன், எலுமிச்சம் பழத்தை பற்களில் தேய்த்துவருவதன் மூலம் பற்களில் உள்ள கறைகளும்; நீங்கும்.

By:Tamilpiththan

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஉடல் எடையை ஈஸியா குறைக்க தினமும் இதை மட்டும் சாப்பிடுங்க!
Next articleமுட்டை கெட்டுப்போய்விட்டது என்று கண்டுபிடிப்பது எப்படி?