மாணவர்கள் நன்றாக விளையாடுவதற்கும் பெற்றோர் ஊக்குவிக்க வேண்டும் என்று இதய மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சிவகடாட்சம் கூறியுள்ளார்.புகை பிடிப்பது போன்ற கெட்ட பழக்கங்களால் உயர் ரத்த அழுத்த நோய், சர்க்கரை நோய் ஆகியவற்றால் பாதிக்கப்படும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
தங்களது குழந்தைகளை படிக்க வைத்து வெளிநாடுகளுக்கு அனுப்பி மேல் படிப்பை படிக்க வைக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட பெற்றவர்களுக்கு தங்கள் குழந்தைகளின் உடல் நலன் மீது அக்கறை இல்லாமல் போய் விடுகிறது.குழந்தைப் பருவத்திலேயே படிப்புடன் அவர்களது விளையாட்டுக்கும் முக்கியத்துவம் அளிப்பது அவசியம். அதன் மூலம் இளம் வயதிலேயே இளைஞர்கள் இதய நோயால் பாதிக்கப்படாமல் காக்க முடியும்.
உடல் எடை கொண்டவர்களும், பணிச்சுமை இல்லாதவர்கள் மட்டுமே நடைப்பயிற்சி செய்கின்றனர். அதனைத் தவிர்த்து உடற்பயிற்சி அல்லது தினமும் நடைப் பயிற்சியை அனைவரும் மேற்கொள்வதன் மூலம் உடல் நலனைக் காத்துக் கொள்ள முடியும் என்று இதய மருத்துவ நிபுணர்கள் கருதுகின்றனர்.