உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால் இவற்றை செய்யுங்கள்! பகிருங்கள்!

0

உங்கள் வாழ்வை மகிழ்ச்சியாக நீங்கள் மாற்ற விரும்பினால் முதல் மந்திரம் இதுதான். எல்லோரையும் நேசியுங்கள். உங்களிடமிருந்து அன்பை மற்றவருக்கு அனுப்புங்கள். கோபம், வெறுப்பு, கடுமை என எல்லாம் மற்றவரை என்ன செய்கிறதோ இல்லையோ உங்களை, உங்கள் ஆரோக்கியத்தைக் கடுமையாகப் பாதிக்கும். எதற்கு மற்றவர் மேல் கோபப்பட்டு உங்கள் ஆரோக்கியத்தைப் பலி கொடுக்க வேண்டும்? பதிலாக ஒவ்வொருவரையும் நேசியுங்கள். அன்பு காட்டுங்கள். எதிரில் இருக்கிறவர் கையில் இருக்கும் ஆயுதங்களை அழிக்கும் சக்தி அன்புக்கு உண்டு. அன்பு ஒரு டிரான்குவிலைசர். அன்பை உங்களுக் காக, உங்கள் மனம் மற்றும் உடல் நல னுக்காகப் பயன் படுத்துங்கள்.

மனதில் எந்தப் பதட்டமும் ஏற்படாதிருக்க திரும்பத் திரும்ப இதை உங்கள் மனதிற்குச் சொல்லுங்கள். நம்மைப் பொறுத்தவரை யாரும் கெடுதல் செய்பவர்கள் இல்லை. எங்கோ, என்றோ ஒரு கெட்ட விஷயத்தை ஒருவர் செய்துவிடுவார் என்ற எண்ணத்தில் எப்போதும் நாம் கெட்டவர்களைத் தேடிக்கொண்டு இருக்கிறோம். வேண்டாம். யாரும் கெட்டவர்கள் இல்லை என்று ஒவ்வொரு நாளும் சொல்லிக் கொண்டு நாளைத் தொடங்கிப் பாருங்கள். நாள் எவ்வளவு மகிழ்ச்சியாக நகருகிறது என்று.

நாம் இந்த விஷயத்தைப் பற்றி கவலைப்படுவதே இல்லை. நமக்காக நம் மனம் கவலைப்பட்டு முன்பாகவே சில செய்திகள் சொல்கிறது. நாம்தான் அலட்சியப் படுத்துகிறோம். ‘‘அடடா… அப்பவே நினைச்சேன்…’’ என்று நாம் கை உதறும் சந்தர்ப்பங்கள் நமக்காக நம் மனம் பேசியதைக் கேட்கத் தவறிய சந்தர்ப்பங்கள்தான். எந்த விஷயத்தையும் முடிவெடுக்கும் முன் இரண்டு நிமிடம் மனம் பக்கம் தள்ளி வையுங்கள். பின் கேளுங்கள். பின் முடிவெடுங்கள். உங்கள் மனம் உங்களைவிட உங்களுக்காக கவலைப்படுகிறது.

நன்றாக இருக்கிறோம் என்று நம்புங்கள். நல்லது நடக்கிறது என்று நம்புங்கள். நல்ல வழியில் போய்க் கொண்டிருக்கிறோம் என்று நம்புங்கள். நடந்த சில கசப்பான சம்பவங்களும் நல்லவற்றை அடையாளம் காட்டவே நடந்தன என்று நம்புங்கள். நம்புவது என்பது மகிழ்ச்சியின் கதவைத் திறக்க உதவும் சாவி. சந்தோஷத்தின் கதவைத் தட்டி தட்டிச் சோர்ந்து போய்விட்டதாக நினைக்கிறீர்களா? சுலபமாக கதவைத் திறந்து சந்தோஷத்தை அடைய முடியும்.

சில நேரம் தெரிந்தோ, தெரியாமலோ தவறு செய்துவிடுகிறோம். அந்தத் தவறுகளை மறப்பது, வெட்கப்படுவது, அவமானப்படுவது என்று மூன்று வழிகளில் எதிர்கொள்ளலாம். மறப்பதால் திரும்ப தவறு நடக்க வாய்ப்புகள் ஏற்படும். அவமானப்பட்டால் மனம் பாதிக்கும். கோபம், வெறுப்பு, சோகம் என அந்த வழி மனிதனை அழுத்தும். மூன்றாவதாக இருக்கிற வெட்கப்படுவதுதான் நல்ல வழி. நம்மையும் அழிக்காமல், திரும்பவும் நடக்கவிடாமல் தடுக்கும் சக்தி அதற்கு உண்டு.

உங்களுக்கு தியானத்தில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். அல்லது மிகப் பொறுமையாக அதன் சக்தியை அடைய முடியாமல் இருக்கலாம். பரவாயில்லை. தியானம் வேண்டாம். ஜஸ்ட் கண்களை மூடுங்கள். மனம் வழி உங்கள் காயங்கள் ஆறுவதாக நினைக்கத் தொடங்குங்கள். ஒரு இரண்டு மூன்று நிமிடம் போதும். எந்த தோல்வியின் காயத்தையும் இது ஆற்றத் தொடங்கும். உடல் காயத்தை உங்கள் மருத்துவர் பார்த்துக் கொள்வார்.

பிறக்கும்போதே எப்படி உங்களுக்குச் சில உரிமைகள் வந்துவிடுகிறதோ அப்படியே சந்தோஷமாக இருப்பதும் வந்துவிடுகிறது. எதற்காகவும் உங்கள் உரிமைகளில் எந்த ஒன்றையும் இழக்காதீர்கள். அதுவும் சந்தோஷமாக இருக்கிற உரிமை உங்கள் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிற உரிமை. அதை இழப்பதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தை இழக்க வேண்டுமா என்று யோசியுங்கள்.

எந்தத் தவறுக்காகவும் எவரையும் ஒருமுறை மன்னித்துப் பாருங்கள். மன்னிப்பு என்பது அன்பைத் திறந்து வைக்கிற சாவி. மன்னிப்பு என்பது மற்றவருக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தேவைப்படுவது. மற்றவை மன்னிப்பது போலவே உங்களையும் நீங்கள் மன்னித்துக் கொள்ள முடியும். இது உங்கள் உடலுக்குக் கேடு தரும் எல்லா உணர்வுகளுக்கும் எதிரி.

ஆம். இது ஒரு விதத்தில் ஸ்பிருச்சுவல் தன்மையை நோக்கி நகருகிற நிலை. மனதை நோக்கிப் பாருங்கள். எல்லாமே சரியாக இருக்கும் என்கிற அபிப்ராயம். நம் எண்ணமே நல்லதையும், கெட்டதையும் தீர்மானிக்கிறது என்று ஷேக்ஸ்பியர் சொன்னது இதுதான். நீங்கள் உங்கள் இதயத்தில் என்னவாக இருக்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள் என்று ஜீனஸ் சொன்னது.

இந்தச் சக்தியை கடவுள் என்று நம்புகிறவர் கடவுளை நோக்கி நகரலாம். ஒரு இயற்கை சக்தி என்று நம்புகிறவர் அதை நோக்கி நகரலாம். பாவம், நோய், மரணம் என எல்லாம் பயம், தயக்கம், கொடுமை என அதன் நண்பர்களையே துணையிருக்க அழைக்கும். ஆனால் இயற்கையின் ஒளியின் முன் நாம் அதிலிருந்து விடுபட்டு அமைதி அடைய முடியும்.

உங்கள் துயரம் எவ்வளவு அதிகமானது அல்லது உங்கள் தோல்வி எவ்வளவு பின்னோக்கி, தள்ளியிருக்கிறது என்பது முக்கியமானது அல்ல. அதிலிருந்து விடுபட்டு உங்கள் நாளுக்காக திடமுடன் காத்திருப்பதுதான் முக்கியமானது. உங்கள் நாள் வருகிறது என்று நம்புங்கள். அதற்காக காத்திருங்கள்.

பயம் என்பது எதிர்மறை சக்தி. கெட்ட தேவதைகளின் கூடாரம். உங்கள் உடலையும், எதிர்காலத்தையும் அரிக்கக்கூடிய சக்தி பயத்திற்கு உண்டு. பயப்படாமல் எப்படி இருப்பது என்று நீங்கள் கேட்கலாம். சுலபமான வழி ஒன்று இருக்கிறது. பயத்தைவிட்டு சற்றுத் தள்ளி நில்லுங்கள். உங்களைத் தொட்டால்தான் ஆரோக்கியக் கேடு. பக்கத்தில் பயத்தை வைத்துவிட்டு அது கொடுக்கிற உத்வேகத்தில் வேலை செய்யுங்கள்.

உங்களுக்குச் சில இடங்களில் சுதந்திரம் கிடைக்கும். சில இடங்களில் கிடைக்காது. கிடைக்காத இடத்தைப் பற்றிய அணுகுமுறை வேறானது. ஆனால் கிடைக்கிற இடத்தின் அருமையை நீங்கள் உணர வேண்டும். அந்த சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தாமல் இருப்பதுதான் சரியான வழி. இந்த வழி வெற்றிகளைத் தருவதைவிட, வெற்றிகளை மேலும் அதிகமாக்க உதவும் என்பதே முக்கியமானது.

நாம் என்ன இப்படி இருக்கிறோம்? நாம் எதற்குமே லாயக்கில்லை? தொட்டாலே தோல்விதான்? நாம் போதுமான தகுதியுடன் இல்லையே? இப்படி எல்லாம் உங்களையே நீங்கள் எதிர்ப்பதைக் கைவிடுங்கள். ஏன் உங்களுக்கு நீங்களே எதிரியாக இருக்க வேண்டும்? எதிர்ப்பதை நிறுத்துங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ? எவ்வளவு திறமை இருக்கிறதோ? அப்படியே உங்களை ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்வின் மகிழ்ச்சிகரமான நாளின் முதல் பெரிய அடியை எடுத்து வையுங்கள்.

நீங்கள் அதிகபட்ச உயரத்தை அடைய வேண்டுமா? இந்த ஒன்றை மட்டும் பின்பற்றினால் போதும். நீங்கள் செய்ய முடிந்ததைச் சொல்லி அதைச் செய்வதற்காக முயற்சி செய்யும்போது உலகத்தின் மிக நேரான பாதை ஒன்றில் நடக்கத் தொடங்குகிறீர்கள். இதனால் பதட்டம் இல்லை. கவலை இல்லை. தேவையற்ற எதிர்பார்ப்பு இல்லை. உங்கள் வெற்றி உங்கள் தேர்வின் அளவில் பிரதிபலிக்கும்.

இதற்குச் சுலபமான வழி மற்றவர்களுக்குக் கெடுதல் செய்யாமல் இருப்பது. வாய்ப்பு இருக்கும்போது நல்லது செய்வது. ஆசிர்வாதங்கள் உங்கள் வாழ்வின் உறுதியான மகிழ்ச்சிக்கு அடித்தளம். மனமறிந்து கெடுதல் செய்யாதீர்கள்.

இதன் மூலம் எதிராளியின் மனதை உங்களால் மதிப்பிட முடியும். மற்றவர் நிலையில் நின்று பார்ப்பது ஒரு கலை. தேவையற்ற வெறுப்பை இது தடுக்கும். அப்படி நின்று பார்க்கும்போது, அவர் சுயநலமாக இருக்கிறாரா? அதனால் உங்களுக்கு பாதிப்பு இருக்கிறதா? என்று யோசியுங்கள். பாதிப்பு இருக்கிறது என்று தெரிந்தால் விலகிவிடுங்கள். அவ்வளவுதான். இதனால் உடல், மனம் இரண்டுக்குமான தேவையற்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும். பெருந்தன்மையை மற்றவரிடம் எதிர்பார்த்துவிட்டு ஒவ்வொரு சூழ்நிலையிலும் மகிழ்ச்சியை உங்களுக்குக் கொண்டுவராது. இப்படி ஒவ்வொரு குணம், செயல் என எல்லாவற்றிலும் மற்றவரிடம் நீங்கள் என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்பதை யோசியுங்கள். நீங்கள் விரும்புகிற அந்த குணம் உங்களிடம் இருக்கிறதா என்று கவனியுங்கள்.

ஆம். உலகம் ஒரு விதத்தில் கண்ணாடி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பிரதிபலிக்கிறது. இந்தப் பிரதிபலிப்பை உங்கள் செயல்பாடுகளே தீர்மானிக்கிறது. உங்கள் எதிரே இருக்கிற இந்தக் கண்ணாடியில் நீங்கள் எப்படித் தெரியவேண்டும் என்று ஆசைப்படுகிறீர்கள் என்பதை யோசித்துக் கொள்ளுங்கள்.

பேச்சு பணம் என்றால் அமைதி என்பது தங்கம். பணத்தைவிட தங்கத்திற்கு மதிப்பும், கௌரவமும் அதிகம். அமைதி காப்பதால் வெளியிலிருந்து வரும் பிரச்னைகள் தவிர்க்கப்படுவதோடு, உடல், மனம் இரண்டும் தணியத் தொடங்குகிறது. ஒரு தியானத்தின் மிக ஆரம்ப நிலைக்கு உங்கள் உடலும், மனமும் பழகத் தொடங்கும்.

நீங்கள் ‘சரி’ என்பதை அடைய விரும்புகிறீர்களா? அல்லது அமைதியை அடைய விரும்புகிறீர்களா? என்பதை யோசியுங்கள். தவறுகளை ஒப்புக் கொள்வது சற்று சங்கடமாக இருந்தாலும் அது அமைதியையும், சந்தோஷத்தையும் உங்களிடம் கொண்டு வந்து சேர்க்கும். கூடவே பெருந்தன்மையானவர் என்ற எண்ணத்தையும் உருவாக்கும். தவிர, செய்த தவறுகளை ஒப்புக் கொள்வதில் மனம் விசாலமடையும்.

தனிமையில் ஒரு நிமிடம் நின்று நாம் ஏதேனும் சேவை செய்கிறோமா என்று யோசியுங்கள். கடவுள் படைப்பில் நம்மால் அமைதியை உருவாக்க முடியும். சேவையில் பல விதங்கள் இருக்கின்றன. ஒரு நிமிடம் யோசியுங்கள். நாம் சந்தோஷத்தை நோக்கி நகருகிறோமா?

உங்கள் கனவுகள், அதன் உயரம், அதை அடைய உங்களுக்கு இருக்கும் சக்தி என எல்லாம் உங்களுக்கு மட்டுமே தெரியும். அதனைச் சரியாக மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது. தவிர, நீங்கள் அதை அடைய முடியாத நேரங்களில் மற்றவர்களின் ‘அச்சச்சோ, அப்பவே நினைச்சேன், இது தேவையா?’ போன்றவற்றை தவிர்க்கலாம். ‘கனவுகளை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளலாம்’ என்ற எண்ணத்தை விட்டு விடுங்கள். ஆனால், ஒவ்வொரு நாளும் அதை நோக்கி நகருங்கள்.

ஆம். ஒவ்வொருவரிடமும் ஒரு எதிரி இருக்கிறான். மற்றவர் கண்டுபிடிப்பதைவிட நமக்கு நாமே கண்டுபிடிப்பதன் மூலம்தான் அவனை வெளியேற்றி வெற்றியைப் பெறமுடியும். அது கோபமா? ஈகோவா? பொறாமையா? என்னவென்று யோசித்து வெளியேற்றுங்கள்.

இது மற்றவற்றைவிட உடலையும், மனதையும் அதிகம் பாதிக்கக்கூடியது. எதற்கு பயம்? உங்களுக்கு கிடைத்திருக்கும் எதுவும் உங்கள் பயத்தால் கிடைத்தது அல்ல. உங்கள் திறமையால் கிடைத்தது. ஆனால், உங்களை விட்டுப் போகும் எதற்கும் உங்கள் பயம் காரணமாக இருக்கலாம். பயம் பலவிதங்களில் வெளிப்படலாம். கோபம், அத்துமீறல், அராஜகம், நோய், வலி, துயரம், மீளமுடியாமை, சுயலாபம், விட்டொழிக்க முடியாத நிலை, கடைசியாக வன்முறை. எதற்கு இதெல்லாம்? இதில் ஒன்றில் கூட மகிழ்ச்சி இல்லை.

நல்ல மரத்தில் மோசமான பழங்கள் பழுப்பதில்லை. கெட்ட மரத்தில் நல்ல பழங்கள் கிடைக்காது. இது பைபிள் வரி. நல்ல எண்ணத்தின் மூலமே நீங்கள் நல்ல பழங்களைக் கொடுக்க முடியும். உங்கள் எண்ணத்தில் அன்பு இருந்தால், உங்கள் எண்ணத்தில் கொடுக்கும் ஆசை இருந்தால், உங்கள் எண்ணத்தில் நேர்மை இருந்தால் உங்கள் விளைவுகள் சந்தோஷத்தின் கனிகளாகத்தான் இருக்கும்.

உங்களுக்கு கிடைத்த வாய்ப்பு சிறியதாக இருக்கலாம். ஆனால், அதில் நீங்கள் செய்யும் செயல் சிறியதாக இருக்கக் கூடாது. நீங்கள் எவ்வளவு சிறப்பாக அதைச் செய்ய முடியுமோ, அவ்வளவு சிறப்பாகச் செய்யுங்கள். மனதில் சின்ன குற்ற உணர்வு கூட இல்லாமல் செய்யுங்கள். அது பல வெற்றிகளின் திறவுகோல்.

உதவி செய்வதன் மூலமே உங்கள் இதயத்தின் சுவர் மெத்தென்ற மலர்களால் பொத்தி வைக்கப்படும். ஒரு கண்ணீர்த் துளியை ஏந்திக் கொள்ளுங்கள். ஒரு ஆதரவற்று அலையும் கரத்தைப் பற்றிக் கொள்ளுங்கள். ஒரு ஜோடி பதறும் கண்களுக்கு ஆறுதலாக நில்லுங்கள்.

ஒவ்வொரு செயலுக்கும் நாம் வெற்றி, தோல்வி என்கிற இருபக்க நாணயத்தை வைக்கிறோம். வாழ்வில் இந்த நாணயம் வைத்தே ஒவ்வொன்றையும் எடை போட்டால் நாம் செல்லாக் காசாகி விடுவோம். ஏனென்றால், எல்லோருக்குமே சறுக்கல் உண்டு. ஒரு செயலுக்கு நிறைவும் மறைவுமே உண்டு. நிறைவு இல்லாத போது தெரிகிற மறைவில் நிறைவு மறைந்து இருக்கிறது. மறைந்து இருப்பதை வெளியே கொண்டு வர மேலும் சற்று காலம் ஆகும். காத்திருந்து திரும்ப நிறைவை அடையுங்கள்.

ஒவ்வொருவருமே ஏதோ ஒரு செயல் முடிந்த உடன்தான் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தேவை ஏதோ ஒரு வெற்றி. அவர்கள் கணக்கில் ஒரு வெற்றி. இதையெல்லாம் தள்ளி வையுங்கள். இருக்கிற ஒவ்வொரு கணமும் வாழுங்கள். வாழும் சந்தோஷத்தை அடையுங்கள். ஒரு நிமிடம் கூட திரும்ப வராத இந்த வாழ்வை ஒவ்வொரு நிமிடமும் வாழுங்கள்.

இதை நாம் சட்டென்று உணர முடியாமல், கேட்டது கிடைக்க வில்லையே என்று வருத்தப்படு வோம். ஆனால், ஒவ்வொரு பிரார்த் தனையுமே ஒவ்வொரு பதிலோடு தான் திரும்ப வருகிறது என்பதே நிஜம். அந்தப் பதில் எந்த வடிவத்தில் எந்த விதத்தில், எந்த நேரத்தில் வந்து சேருகிறது என்பதை உணர முயற்சியுங்கள்.

எது தேவை என்பதைப் போலவே எது தேவை இல்லை என்பதும் மிக முக்கியமானது. இல்லைகளை சுலபத்தில் நீக்க முடியும். தேவைகள் என்று சிலவே நிற்கும். அதில் ஒன்றை கைப்பற்றுங்கள். கண் வையுங்கள்.

பகிர்ந்து கொள்ளுவதன் மூலமே வாழ்வின் சுவை அதிகரிக்கும். உணர்வில், உடலில் பகிர்ந்து கொள்கிற எல்லாமே சுவையுடையது என்பதை நினைத்துப் பாருங்கள். பகிர்வில் ஆன்மா ஈடுபடுகிறது. இது ஒரு விதத்தில் ஆன்மாவிற்கான லோகா.

இது எதிர்பார்ப்பின் மூலம் வருகிற பொருளைவிட அதிக நிம்மதியைத் தரும். உங்கள் மனம் சலனமின்றி செயல்படும். கண்களில் கடவுளின் ஈரம் படிந்துவிடும். ஒரு கோயிலின் கதவைப் போல மனம் திறந்து கொள்ளும்.

செய்ததையே செய்யாதீர்கள். நீங்கள் இப்போது இருக்கும் நிலைக்கு நீங்கள் செய்ததையே திரும்பத் திரும்பச் செய்தது ஒரு காரணமாக இருக்கலாம். தொடங்குங்கள் புதிதாக. உங்கள் எண்ணத்தை, உங்கள் செயலை,உங்கள் வாழ்வை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார்! பிரபல தமிழ் நடிகரின் தாய் கழுத்து அறுத்து கொலை!
Next article26.10.2018 இன்றைய ராசிப்பலன் – ஐப்பசி 09, வெள்ளிக்கிழமை!