Home Patti Vaithiyam தினசரி 3பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம்!

தினசரி 3பேரீச்சம் பழம் சாப்பிடுவதால் நடக்கும் அற்புதம்!

0
803

பேரீச்சம் பழத்தில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம், விட்டமின் A, B, B2, B5, E போன்ற ஊட்டச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளதால், இதை தினமும் மூன்று தவறாமல் சாப்பிட்டு வந்தால், ஏராளமான மருத்துவ நன்மைகளை பெறலாம்.

நன்மைகள்

மூன்று பேரீச்சம் பழத்தை முதல் நாள் இரவிலேயே ஒரு டம்ளர் நீரில் ஊறவைத்து, காலையில் அதை குடித்து வந்தால், அது செரிமான மண்டலம் மற்றும் குடல் இயக்கத்தை மேம்படுத்தி, வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை தடுக்கிறது.

பேரீச்சை பழத்தில் உள்ள இரும்புச்சத்து, ரத்த உற்பத்தியை அதிகரித்து, உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கி, ரத்தச்சோகை போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

பேரீச்சம் பழத்தில் உள்ள பொட்டாசியம், இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாத்து, கெட்ட கொழுப்பைக் குறைத்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பை குறைக்கிறது.

பேரீச்சையில் உள்ள இனிப்பு சுவையில் சுக்ரோஸ், ஃப்ரெக்டோஸ் மற்றும் குளூக்கோஸ் போன்றவை அதிகமான நிறைந்துள்ளது. எனவே இது மந்தநிலை போன்ற சோர்வுத்தன்மை பிரச்சனையை தடுக்கிறது.

எலும்பின் வளர்ச்சிக்கு உதவும் கால்சியம் அதிகமாக உள்ளதால், இது ஆஸ்டியோபோரோசிஸ், எலும்பு தேய்மானம் போன்ற எலும்பு நோயில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.

பேரிச்சம் பழத்தில் உள்ள விட்டமின் மற்றும் பொட்டாசியம் சத்துகள், மூளை மற்றும் நரம்பு மண்டலத்தின் செயல்பாட்டை அதிகரித்து, நினைவாற்றல் இழப்பைத் தடுக்கிறது.

மூன்று பேரீச்சம் பழத்திற்கு மேல் சாப்பிட்டால் என்ன நடக்கும்?

தினமும் ஆறு பேரீச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால், அது உடல் எடையை அதிகரிக்கச் செய்யும்.
பேரீச்சம் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், அது மாலைக்கண் நோயை குணமாக்கும்.

பேரீச்சையில் உள்ள கரிம சல்ஃபர், உடலில் ஏற்படும் அலர்ஜிகள் மற்றும் ஒவ்வாமை பிரச்சனையை தடுக்கும்.
பெண்களுக்குச் சீரான மாதவிடாய்ச் சுழற்சியை ஏற்படுத்த உதவுவதுடன், வயிற்றுப் புற்றுநோயை குணப்படுத்துகிறது.

பேரீச்சம் பழத்தினை எப்படி சாப்பிடலாம்?

பேரீச்சம் பழமானது உலர்ந்ததாக அல்லது ஃப்ரெஷ்ஷாக இருந்தாலும், அதை நன்கு கழுவிய பின் சுத்தம் செய்து சாப்பிட வேண்டும்.

பேரீச்சம் பழத்தை பாதாம், வால்நட், உலர் திராட்சை, முந்திரி ஆகியவற்றுடன் சேர்த்து ஜூஸாகவும் அல்லது தனியாகவும் சாப்பிடலாம்.

பேரீச்சை பழத்தின் விதையை வறுத்துப் பொடி செய்து, அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்துக் காபியாக குடிக்கலாம்.

தினமும் பேரீச்சம் பழத்தை நட்ஸ்களுடன் சேர்த்து இரண்டுவேளை சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும்.

Previous article07.10.2018 இன்றைய ராசிப்பலன் புரட்டாசி 21 ஞாயிற்றுக்கிழமை !
Next articleதயிர் சாப்பிட்டால் இப்படி ஒரு அற்புதம் நடக்குமாம் இத்தனை நாளா இது தெரியாம போச்சே!