உடனே தூக்கி எறியுங்கள்! பிறப்புறுப்பில் அரிப்பு உண்டாக வீட்ல இந்த ஸ்பான்ஞ் இருக்கிறதுதான் காரணம்!

0

சமையலறையில் உள்ள 17 அசுத்தமான பொருட்களில் பாத்திரம் கழுவ பயன்படுத்தும் நார் அல்லது ஸ்பான்ஞ்சும் ஒன்று. சுத்தம் செய்வதற்காக ஸ்பான்ச்சை அடிக்கடி கழுவும் பழக்கம் உள்ளவரா நீங்கள் ? அது முற்றிலும் தவறு.

ச்பான்ச்சை கழுவுவது முற்றிலும் தவறான ஒரு பழக்கம். அதனை சுத்தம் செய்யவே கூடாது. என்ன ஆச்சர்யமாக உள்ளதா? ஆம், கிருமிகள் மறைந்திருக்கும் ஸ்பாஞ்சை புதுப்பிக்க ஒரே வழி, அதனை குப்பை தொட்டியில் வீசுவது தான் என்று ஒரு அறிவியல் அறிக்கை கூறுகிறது. ஒவ்வொரு வாரத்திற்கு ஒரு முறை புதிய ஸ்பாஞ்சை பயன்படுத்த ஆராய்ச்சியாளர்கள் அறிவுறுத்துகின்றனர். உங்கள் மளிகை பொருட்கள் பட்டியலில் இதனை இணைத்துக் கொள்ளவில்லையெனில், நோய்க்கிருமிகளைப் பரப்பும் சக்திமிக்க கிருமிகளுக்கு நீங்கள் இடம் கொடுக்கிறீர்கள் என்பது பொருள். இவற்றை அடிக்கடி சுத்தம் செய்தாலும், இதே நிலை தான் உண்டாகும்.

ஸ்பான்ஞ்சை கழுவாதீங்க

சுத்தம் செய்யப்படாத ஸ்பான்ச்சுடன் வெந்நீர் அல்லது மைக்ரோ வேவ் மூலம் சுத்தம் செய்யப்பட்ட ஸ்பாஞ்சை ஒப்பிட்டு பார்த்தார்கள் ஆராய்ச்சியாளர்கள். சுத்தம் செய்யப்பட்ட மற்றும் சுத்தம் செய்யப்படாத ஸ்பான்ஞ்சில் இடையில் எந்த ஒரு வேறுபாடும் இல்லை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆகவே ஸ்பான்ஞ்சில் சுத்தம் செய்வதால் கிருமிகள் அழிவதில்லை என்ற செய்தி விளங்குகிறது. அழுக்கு படிந்த பாத்திரங்களைக் கழுவ இவற்றை பயன்படுத்துவதால், மேலும் அதிக கிருமிகள் மட்டுமே உங்கள் ஸ்பான்ஞ்சில் இடம்பெறும் என்பது கூடுதல் செய்தி.

கிருமிகள் உற்பத்தி

ஆய்வின்படி, ஸ்பான்ஞ்சில் உள்ள கிருமிகளை அகற்றுவதன் மூலம் அதிக கிருமிகள் உற்பத்தியாகின்றன. கிருமிகள் தங்களை தற்காத்துக் கொள்ள, அதி தீவிர உற்பத்தியை தொடங்குகின்றன. ஆகவே இப்போது இருப்பது பழைய கிருமிகள் மட்டும் இல்லை. இவைகள் நோய்களை உண்டாக்கும் மோர்க்செல்லா ஆஸ்லோன்சஸ் கிருமிகளாக மாறுகின்றன.

பிறப்புறுப்பு அழற்சி

ஸ்பான்ஞ்சில் ஒருவித துர்நாற்றத்தை மட்டும் கொடுப்பதில்லை. மேலும் மனிதர்களுக்கு மூளை அழற்சி, பிறப்புறுப்பு அழச்சி போன்ற நோய்களையும் தருகிறது என்று மருத்துவ தொற்று நோய்கள் ஆய்வு கூறுகின்றது. இதனால் எப்படி பிறப்புறுப்பில் அழற்சி வரும் என்று கேட்கிறீர்களா?… அதான் வருதே பாஸ்…

தூக்கி எறியுங்கள்

இதெல்லாம் கேட்கவே பயமாக இருக்கா? நாம் ஆரோக்கியம்னு நினைக்கிற பல விஷயங்கள் எப்படி நமக்கு ஆப்பு வைக்கிறது என்று பார்த்தீர்களா?… இதனை பாதி படிக்கும்போது கூட ஓடிச்சென்று வீட்டில் உள்ள பாத்திரம் கழுவும் ஸ்பாஞ்சை உடனடியாக எடுத்து குப்பையில் வீசுங்கள். உங்கள் மனமும் நிம்மதியடையும். நாங்களும் இந்த நல்ல விஷயத்தை சொன்னதற்காக திருப்தியடைவோம்.

தேங்காய் நார் போதும்

காசையும் செலவழித்து, நம்முடைய உடல் ஆரோக்கியத்தையும் கெடுத்துக் கொள்ளாமல், நம் முன்னோர்கள் சொன்ன பல ஆரோக்கியமான வழிகளைப் பிழன்பற்றலாம். அதனால் ஆமாங்க… செலவே இல்லாம சூப்பர் நேச்சுரல் டிஸ்வாஷ் ஸ்பான்ஞ்ச் தேங்காய் நார் இருக்கிறப்போ எதுக்கு வம்ப நாமே விலை கொடுத்து வாங்கணும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleநோய் வராமல் வாழ ஆசையா? அப்ப துளசியை இப்படி யூஸ் பண்ணுங்க!
Next articleவிக்ஸில் ஏன் முக்கிய பொருளாக கற்பூரம் சேர்க்கப்படுகிறது. இது தான் காரணம்!