இந்த ஒரு பொருள் போதும் ஆஸ்துமா, மலச்சிக்கல், கண் நோய் பிரச்சனைக்கு உடனடி தீர்வு!

0

சிவனுக்கு உகந்த மரம் வில்வ மரம். தெய்வீக மரமாக கருதப்படும் வில்வ மரம், எல்லா இடங்களிலும் வளரும் மரம். இமயமலையின் அடிவாரத்திலிருந்து ஜீலம், பலுசிஸ்தானம் கீழ்பகுதிவரையிலும் தீபகற்பத்தின் தெற்குப் பகுதியிலும் பரந்து விரிந்து காணப்படுகிறது. இலையுதிர் மரவகையைச் சார்ந்தது. இலை கூட்டிலை மூவிலை அல்லது ஐந்து இலை கொண்டு இருந்தால் அதை மகாவில்வம் என்பார்கள்.

நமது முன்னோர்கள் ஆன்மிகம் என்ற பெயரில் மருத்துவத்தையும், அறிவியலையும் பிணைத்து வைத்துவிட்டு சென்றுவிட்டனர். காலப்போக்கில் அது மூட நம்பிக்கையாக மாறிவிட்டது. காலம் மருவிய பின்பு மனிதனின் இடை சொருகல்களில் பல அறிவியல் சார்ந்த விஷயங்களும், மருத்துவம் சார்ந்த விஷயங்களும் கண்மூடித்தனமான காரியங்களாக மாறிவிட்டது.

இந்த வகையில் இப்போது வில்வத்தை சிவனுக்கு அணிவிக்கும் மாலையாகவும், பூஜைக்கு வைக்கப்படும் பொருளாகவும் மட்டுமே பெரும்பாலானோர் எண்ணுகின்றனர் அதில் உள்ள அற்புதமான மருத்துவ குணங்கள் எண்ணிலடங்காதவை. மகரந்தத் தூள்கள் கொண்டது வில்வம் என கூறப்படுகிறது. வில்வமர நிழல், காற்று இவற்றிலும் கூட மருத்துவ சக்தி இருக்கிறது…

வில்வ மரத்தின் இலை, காய், கனி, வேர், மரப்பட்டை, பூ அனைத்தும் பல்வேறு வகையில் நோய்களைத் தீர்க்கும் மருந்தாகப் பயன்படுகிறது. மணமூட்டி துவர்ப்பி, குளிர்ச்சியுண்டாக்கி, மலமிளக்கி, பசி ஊக்கி போன்ற குணங்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது.

மருத்துவப் பயன்கள்

வில்வ இலைகளைப் பிழிந்து சாறு எடுத்து ஒரு குவளை நீரில் ஒரு கரண்டி சாறைக் கலந்து குடிக்க காய்ச்சல், சளி தீரும்.

வில்வ இலைகளை நீரிலிட்டுக் காய்த்து வடிகட்டி நீரை நாள்தோறும் காலையில் ஒரு அவுன்ஸ் வீதம் குடித்து வர ஆஸ்துமா, மலச்சிக்கல் குணமாகும்.

வில்வக்காயை உடைத்துச் சதையை அரைத்து எருமைத் தயிரில் கலந்து அருந்த வயிற்றுக் கடுப்பு, கழிச்சல் தீரும்.

வில்வக்காயின் சதையை பசும்பால் விட்டு அரைத்து தலைக்கு தேய்த்துக் குளித்துவர கண் எரிச்சல், தலைச்சூடு மாறும்.

வில்வப்பழத்தை நீரில் குழைத்து சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால் கண் நோய்கள் குணமாகும்.

இதன் வேரை நீரிலிட்டுகாய்த்து கசாயமாக்கி அருந்த வயிற்றிலுள்ள அமீபியா கிருமிகள் அழியும்.

வில்வ வேர்க் கசாயம் காய்ச்சலை குணப்படுத்தும்.

இதன் இலைத்தளிர்களை சட்டியிலிட்டு வதக்கி இளஞ்சூட்டில் கண்களின் மேல் ஒத்தடம் கொடுக்க கண்வலி, கண்சிவப்பு தீரும்.

வில்வப் பழச்சதையை உலர வைத்து பொடியாக்கி சிறிதளவு பொடியுடன் சர்க்கரை சேர்த்து உண்ண சீதபேதி, பசியின்மை தீரும்.

பழத்தை பிசைந்து பாலில் கலந்து கற்கண்டு சேர்த்து காய்ச்சி சாப்பிட பித்தம், குமட்டல், நெஞ்சு எரிச்சல் குணமாகும்.

வில்வ வேர்ப்பட்டையை அரைத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை ஒரு தேக்கரண்டி வீதம் சாப்பிட தாது பலப்படும்.

பழச்சதையை நீரில் கலந்து சர்க்கரையை சேர்த்து அருந்தி வர மற்ற பழச்சாறு போலவே சுவையாக இருக்கும்.

வில்வப்பழச்சாறு குடலை பலப்படுத்தும், மலச்சிக்கலை மாற்றும். மூச்சு நோய்களைக் குறைக்கும்.

வில்வப்பழச்சாறு உடலை பலப்படுத்தும், கண் நோய்களைக் குணப்படுத்தும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article19.09.2018 இன்றைய ராசிப்பலன் புரட்டாசி 03, புதன்கிழமை!
Next articleநோய் வராமல் வாழ ஆசையா? அப்ப துளசியை இப்படி யூஸ் பண்ணுங்க!