ஒரே மருத்துவமனையில் ஒரே நேரத்தில் கர்ப்பமான 16 நர்ஸ்கள்.

0

உலகில் வினோதமான நிகழ்வுகள் அவ்வப்போது நடந்து ஆச்சரியப்பட வைத்து கொண்டிருக்கும் நிலையில் அமெரிக்காவில் ஒரே மருத்துவமனையில் பணிபுரியும் 16 நர்ஸ்கள் ஒரே நேரத்தில் கர்ப்பமாகியுள்ளனர். அதிலும் இந்த 16 நர்ஸ்களும் ஐசியூ பிரிவில் பணிபுரிபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவில் உள்ள அரிசோனா மாகாணத்தில் பேனர் டெசர்ட் மெடிக்கல் சென்டர் என்ற மருத்துவமனை உள்ளது. இங்கு ஐசியூ பிரிவில் மொத்தம் 16 நர்ஸ்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இவர்களுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் திருமணம் நடந்திருந்தாலும் தற்போது ஒரே நேரத்தில் கர்ப்பமாகியிருப்பது தெரியவந்துள்ளது. இந்த கொண்டாட்டத்தை கொண்டாடும் வகையில் கர்ப்பமான 16 நர்ஸ்களும் குரூப் புகைப்படம் எடுத்து அதனை ஃபேஸ்புக்கில் பதிவு செய்துள்ளனர்.

வரும் டிசம்பர் மற்றும் ஜனவரியில் இவர்கள் அனைவருக்கும் குழந்தை பிறக்கும் என்று கூறப்படும் நிலையில் இன்னும் ஒருசில மாதங்களில் அனைவரும் ஒட்டுமொத்தமாக பிரசவ விடுமுறை எடுக்கவுள்ளதால் மருத்துவமனை நிர்வாகம் மாற்று ஏற்பாடுக்கு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Previous articleஇதுபோன்ற ஒரு நிலச்சரிவை பார்த்ததுண்டா? கேரளாவின் பேரளிவு!
Next article3000 அடி ஆழத்திலிருந்து வெளிவந்த உண்மை! இலங்கையில் மறைக்கபடும் தமிழர்களின் பெருமை!