அவுஸ்திரேலியாவில் திருமணமான இரண்டு நாளில் புதுமண தம்பதிக்கு அதிர்ஷ்ட லாபச்சீட்டு மூலம் 671,513 டொலர், இலங்கை பண மதிப்பிற்கு 7,80,18,333 கோடி ரூபாய் பரிசு விழுந்துள்ளது.
Cairns நகரைச் சேர்ந்த இளைஞனுக்கும் இளம்பெண்ணுக்கும் அண்மையில் திருமணம் நடந்தது. இருவரும் அதிர்ஷ்ட லாபச்சீட்டு ஒன்றினை வாங்கியுள்ளனர்.
இதனையடுத்து குறித்த தம்பதிக்கு அதிர்ஷ்டம் தேடி வந்துள்ளது.
இந்த நிலையில் இது எங்களுக்கு கிடைத்த திருமணப் பரிசுகளில் சிறந்த பரிசு இதுவென தாம் நினைக்கிறோம் என குறித்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர்
இந்தப் பணத்தை வைத்து என்ன செய்வது என இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.