Home Patti Vaithiyam அரிசி கழுவிய நீரில் நடக்கும் அதிசயம்! கற்றாழையை இப்படி பயன்படுத்தவும்!

அரிசி கழுவிய நீரில் நடக்கும் அதிசயம்! கற்றாழையை இப்படி பயன்படுத்தவும்!

0
7219

ஆசிய பெண்களின் அழகிற்கு அரிசி தண்ணீர் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த அரிசி தண்ணீரில் ஏராளமான ஊட்டச்சத்து அளவுகள், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், போன்றவை அடங்கியுள்ளன.

இந்த பழக்கம் பண்டைய காலத்தில் இருந்து பின்பற்றப்பட்டு வருகிறது. அந்த காலத்தில் பிறந்த குழந்தையை இந்த அரிசி தண்ணீர் கொண்டு தான் குளிப்பாட்டுவார்கள்.

முகம் அழகாக தூய்மையாக இருக்க இப்பவும் ஆயிரக்கணக்கான பெண்கள் இந்த அரிசி தண்ணீரை பயன்படுத்தி வருகின்றனர். இந்த முறைகளை பின்பற்றி உங்கள் கனவு சருமத்தை பெற இயலும். எனவே ட்ரை பண்ணி பாருங்க.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் கற்றாழை ஜெல்
2 டீ ஸ்பூன் கற்றாழை ஜெல் மற்றும் 1 டீ ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும். இதை முகத்தில் தடவவும். பிறகு 30 நிமிடங்கள் கழித்து சூடான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும்.

இப்படி அரிசி தண்ணீரை பயன்படுத்தும் போது மிருதுவான மென்மையான சருமத்தை பெறலாம். வாரத்திற்கு இரண்டு முறை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் வெள்ளரிக்காய்
ஒரு பெளலில் வெள்ளரிக்காயை நறுக்கி எடுத்து கொள்ளவும். பிறகு அதை நன்றாக மசித்து அதனுடன் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீரை சேர்க்க வேண்டும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.

இந்த முறையை வாரத்திற்கு என்ற முறையில் பயன்படுத்தி வந்தால் உங்கள் சருமம் பொலிவாகி புதுப் பொலிவுடன் காணப்படும்.

அரிசி கழுவிய தண்ணீர் மற்றும் தேன்
1 டேபிள் ஸ்பூன் சுத்தமான தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் அரிசி தண்ணீர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு விடவும்.

பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவவும். வாரத்திற்கு என்ற முறையில் இதை பயன்படுத்தி வந்தால் முகத்தில் உள்ள பருக்கள் எல்லாம் மறைந்து மாசு மருவற்ற முகத்தை பெறலாம்.

Previous articleமட்டக்களப்பு கடலில் தமிழர் ஒருவருக்கு கிடைத்த அதிஷ்டம்! இத்தனை லட்சம் பெறுமதியா?
Next articleவெறும் வயிற்றில் வெந்தயம் சாப்பிட்டால் என்ன நடக்கும்? உடனே பகிருங்கள்!