Home thatstamil one india tamil oneindia tamil மனைவியின் ஒழுக்கமற்ற வீடியோவை பார்த்து கணவர் செய்த அதிர்ச்சி செயல்!

மனைவியின் ஒழுக்கமற்ற வீடியோவை பார்த்து கணவர் செய்த அதிர்ச்சி செயல்!

0
537

மனைவிக்கு வேறு நபருடன் தொடர்பு இருப்பதை கண்டுப்பிடித்த கணவன் மொத்த குடும்பத்தையும் எரித்து கொன்று தானும் உயிரைவிட்ட வழக்கில் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் குல்விந்தர் சிங் (35). இவருக்கு மனைவியும் அபி (5) சோனல் (8) என இரண்டு பிள்ளைகளும் இருந்தனர்.

குல்விந்தர் ஜோர்டனில் தங்கி வேலை பார்த்து வந்த நிலையில் சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார்.

அப்போது அவரின் போனுக்கு ஒரு வீடியோ வந்தது. அதில் தனது மனைவியின் அந்தரங்க விடயங்கள் இருப்பதை பார்த்து குல்விந்தர் அதிர்ச்சியடைந்தார்.

இது குறித்து மனைவியிடம் அவர் விசாரித்த போது, குர்பிரீத் என்பவருடன் தனக்கு தொடர்பு ஏற்பட்ட நிலையில் தன் அந்தரங்க விடயங்களை வீடியோ எடுத்ததாகவும், பின்னர் அந்த வீடியோவை அவர் நண்பர்களிடம் காண்பித்ததாகவும் கூறியுள்ளார்.

இதன் காரணமாக குர்பிரீத்தின் நண்பர்களும் குல்விந்தர் மனைவியை ஆசைக்கு இணங்க வற்புறுத்தியுள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த குல்விந்தர் வீட்டில் இருந்த பெட்ரோலை எடுத்து தன் மீதும், தனது மனைவி மற்றும் குழந்தைகள் மீதும் ஊற்றி தீவைத்து கொளுத்தியுள்ளார்.

இதில் நால்வரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சம்பவம் தொடர்பாக விசாரித்த பொலிசார் இவ்வழக்கில் தொடர்புடைய குர்பிரீத், பல்கர் சிங், திரத் சிங், சத்ய தேவி ஆகிய நால்வரை கைது செய்துள்ளனர்.

அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Previous articleயாழ்ப்பாணத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை! மக்களை காப்பாற்றுமாறு அவசர கோரிக்கை!
Next articleபெண்கள் வயதுக்கு வருகையில்! அவர்களின் மனநிலை! உங்கள் வீட்டில் பெண் பிள்ளைகள் இருந்தால் அவசியம் படியுங்கள்!