87 வயதிலும் ஆட்டோ ஓட்டும் முதியவர்!

0
301

தனது 87 வயதிலும் அடுத்தவர்களை நம்பி வாழாமல் முதியவர் ஒருவர், வாழ்க்கை நடத்தி வருவது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இன்றைய நவீன உலகத்தில், பலர் அடுத்தவரின் பணத்தை திருடியும், நகையை திருடியும், வங்கியில் பணத்தை வாங்கிக் கொண்டு திரும்ப செலுத்தாமலும் பிழைப்பை நடத்தி வரும் வேளையில் முதியவர் ஒருவரின் செயல் இன்றைய இளம் தலைமுறையினருக்கு, பாடம் கற்பிக்கும் முறையில் உள்ளது.

டெல்லியை சேர்ந்தவர் ஓம் பிரகாஷ்(87). இவரது 87 வயதிலும் அடுத்தவர்களை நம்பி வாழாமல் உழைத்து சம்பாதித்து பிழைப்பு நடத்துகிறார். விபத்தை ஏற்படுத்தாத வகையிலும், மீட்டருக்கு மேல் ஒரு பைசா கூட மக்களிடம் கேட்காததாலும், இவரது ஆட்டோவில் பயணிக்க பலர் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

1955-ம் ஆண்டு முதல் 1980-ம் ஆண்டு வரை வாடகை டாக்சி ஓட்டி வந்த இவர். தற்பொழுது ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்த வயதிலும் உழைத்து சாப்பிட வேண்டும் என நினைக்கும் இவரது லட்சியம், பலருக்கு வாழ்க்கையில் முன்னேற உத்வேகத்தை அளித்துள்ளது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: