82 மில்லியன் டொலர் பெறுமதியான 160 ரயில்களை இலங்கைக்கு வழங்கும் இந்தியா!

0
410

இந்தியாவில் இருந்து 160 ரயில்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவற்றின் பெறுமதி 82 மில்லியன் டொலர்கள் என்றும், இந்த ரயில்கள் சலுகை நிதியடிப்படையில் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளதாகவும் இந்திய செய்தி சேவை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கடந்தவார இறுதியில் இரண்டு நாடுகளுக்கும் இடையில் இதற்கான உடன்படிக்கை செய்துக் கொள்ளப்பட்டுள்ளது.

இதேவேளை, ஏற்கனவே இந்திய இலங்கையின் ரயில்வேயை மேம்படுத்தும் முகமாக ஒதுக்கியுள்ள 318 மில்லியன் அமெரிக்க டொலர்களின் ஒருக்கட்டமாகவே புதிய ரயில்வே பெட்டிகளும் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous article400பெண்களை ஏமாற்றி கோடி கணக்கில் பணத்தை பறித்த இளைஞன்!
Next articleவன்னியில் கணவன் – மனைவி சடலமாக மீட்பு?