75 வருடங்களுக்கு பின் வெளியில் எடுக்கப்பட்ட அதிசயம்! புகைப்படங்கள் இணைப்பு

0

இரண்டாம் உலகப் போரின் போது இலங்கை கடற்பரப்பில் வைத்து மூழ்கடிக்கப்பட்ட கப்பல் ஒன்று 75 வருடங்களுக்கு பின் வெளியில் எடுக்கப்பட்ட விடயம் அனைவராலும் பேசப்பட்டது.

இந்த கப்பலை இலங்கை கடற்படையினர் கடந்த 31ஆம் திகதி மீண்டும் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளதுடன், இவை அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கப்பல் பார்ப்பதற்கு மிகவும் பிரம்மாண்டமாக காணப்படுவதுடன், இதை வெளிக்கொண்டு வருவதில் இராணுவத்தினர் செயற்படும் விதம் குறித்தும் பெரிதும் பேசப்படுகின்றது.

திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருந்த குறித்த கப்பல், 1942ஆம் ஆண்டு ஏப்ரல் 9ஆம் திகதி ஜப்பான் விமானப்படை மேற்கொண்ட குண்டு தாக்குதலில் கடலில் மூழ்கியது.

5 மாதங்கள் மேற்கொண்ட நடவடிக்கையின் பின்னர் 35 அடி ஆழத்தில் மூழ்கியிருந்த கப்பலை 75 வருடங்களுக்கு பின் கடலுக்குள் இருந்து வெளியில் எடுத்து இலங்கை கடற்படையினர் சாதனை படைத்துள்ளனர்.

இதில் ஏராளமான இராணுவத்தினர் கடலுக்கு அடியில் சென்றும், வெளியில் இருந்தும் பல தொழில்நுட்பங்களை பயன்படுத்தி இந்த கப்பலை வெளியில் எடுத்துள்ளனர்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleபிரபாகரனை காப்பாற்ற முள்ளிவாய்க்கால் வந்த அமெரிக்க கப்பல்?
Next articleஇலங்கையில் ஒரு இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுவோருக்கு முக்கிய அறிவித்தல்!