700 பேரின் உயிரை காப்பாற்றிய நபரும் நாயும்! யாழ்ப்பாணத்தில் ஏற்படவிருந்த பேராபத்து!

0

யாழ்ப்பாணம், உரும்பிராய் பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வுக்கு தயாரிக்கப்பட்ட உணவில் விஷம் கலக்கப்பட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் இடம்பெற்றது.

உணவில் விஷம் கலக்கப்பட்டதாக தகவல் கிடைத்தவுடன் சம்பவ இடத்திற்கு சென்ற சுகாதார பரிசோதகர்கள் அனைத்து உணவுகளையும் அங்கிருந்து கொண்டு சென்றுள்ளனர்.

திருமணத்திற்காக ஏற்பாடு செய்யப்பட்ட உணவினை முதலில் சாரதி ஒருவரே உட்கொண்டுள்ளார். அவர் அவசரமாக செல்ல வேண்டியிருந்தமையினால் முதலில் சாப்பிட்டுள்ளார். அதற்கமைய வேகமாக சாப்பிட்டவர் திடீரென மயக்கமடைந்துள்ளார்.

மயங்கி விழுவதை அவதானித்த மற்றுமொரு சாரதி அந்த உணவில் சிறிதளவு எடுத்து நாய் ஒன்றுக்கு வழங்கியுள்ளார். எனினும் நாய் அதனை உட்கொள்ள மறுத்துள்ளது. இதனால் உடனடியாக யாழ்ப்பாண சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் உணவு தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பக்கட்ட விசாரணைகளில் உணவில் விஷம் கலக்கப்பட்டதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைக்காக திருமணத்திற்கு சமைக்கப்பட்ட அனைத்து உணவுகளையும் அதிகாரிகள் அங்கிருந்து கொண்டு சென்றுள்ளனர்.

நேரத்துடனே யாரோ ஒருவர் அறிவித்தமையினால் ஏற்படவிருந்த பாரிய ஆபத்து தவிர்க்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எப்படியிருப்பினும் இந்த சம்பவத்தின் பின்னர் திருமணத்திற்கு வந்தவர்கள் பெரும் அசௌகரியத்திற்கு முகங்கொடுத்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தின் பல இடங்களிலுள்ள உணவகங்களிலிருந்து உணவு பெற்று திருமண நிகழ்விற்கு வந்தவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. மதிய உணவு பெற்றுக் கொள்வதற்கு மாலை 4 மணியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

திருமண வைபவத்தின் போது சுமார் 700 பேருக்கான உணவு சமைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleசுற்றிவளைத்து கொள்ளுப்பிட்டியில் பிடிக்கப்பட்ட ஆபாச அழகிகள்!
Next articleதமிழர்கள் தூக்கி எறியும் இந்த ஒரு பொருள் தான் சீன பெண்கள் இவ்ளோ அழகா இருக்க காரணமாம்?