5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சை எழுதிய மாணவி! தந்தையின் சடலம் வீட்டில்!

0
519

அம்பாறை தமன பிரதேசத்தில், காட்டு யானை தாக்கியதில் கொல்லப்பட்ட தந்தையின் உடல் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில் மாணவி ஒருவர் இன்று 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

தந்தையின் உடலுக்கு அருகில் சென்று ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டு மாணவி பரீட்சை எழுத சென்ற சம்பவம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானதாக இருந்து என அருகில் இருந்தவர்கள் கூறியுள்ளனர்.

மாணவி படிக்கும் பாடசாலையின் அதிபர், வீட்டுக்கு வந்து மாணவியை அழைத்துச் சென்றுள்ளார். மஹாநாகபுர பாடசாலையில் அமைக்கப்பட்டிருந்த பரீட்சை நிலையத்தில் மாணவி பரீட்சைக்கு தோற்றியுள்ளார்.

கடந்த 3ம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருந்த போது, குறித்த சிறுமியின் தந்தை, காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்.

அருண சாந்த என்ற 37 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தையே இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

Previous articleதூக்கில் தொங்கிய தந்தை! திருமணமான 35 நாட்களில் குழந்தை பெற்ற புதுப்பெண்!
Next articleகதறும் குடும்பம்! பிரித்தானியாவில் பரபரப்பான சாலையில் கொடூரமாக கொல்லப்பட்ட இளம்பெண்!