4வது இடத்தில் பாவக் கிரகங்கள் இருந்தால்!

0

நான்காவது இடத்தில் பாவ கிரகங்கள் இருந்தாலே அவர்கள் கெட்டவர்கள் என்று கொள்ளக் கூடாது. உதாரணமாக 4இல் கேது இருந்தால் அந்த ஜாதகர் மக்கள் போற்றும் மருத்துவராக திகழ்வார் என்று ஜோதிட நூல்கள் கூறுகின்றன. அது ஹோமியோபதி, நாட்டு வைத்தியம், அலோபதி ஆக இருக்கலாம். ஏனென்றால் கேது மருத்துவத்திற்கும், வேதத்திற்கும், ஞானத்திற்கும் உரிய கிரகம்.

அதனால் 4இல் கேது இருந்தாலே அந்த ஜாதகர் கெட்டவர் என்று கூறி விடக் கூடாது. நான்கில் ராகு, கேது, சனி அமர்ந்து 4ஆம் வீட்டிற்கு உரிய கிரகமும் 6, 8, 12இல் மறைந்திருந்தாலோ அல்லது கெட்ட கிரகங்களுடன் சேர்ந்திருந்தாலோ அந்த ஜாதகர் ஒழுக்கம் தவறியவராக இருப்பார்.

இதேபோல் 4இல் கேது, ராகு, சனி அமர்ந்து, நான்காம் வீட்டிற்கு உரிய கிரகமும் பாவ கிரகங்களுடன் கெட்டுப் போயிருந்தாலும் சிலர் இளமையில் ஒழுக்கம் கெடாமல் இருந்து, அந்த தசை வரும் போது கெட்டுப் போனவர்களையும் அனுபவத்தில் பார்த்திருக்கிறோம்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஜாதகப் பொருத்தம் பார்த்தும் சில திருமணங்கள் தோல்வியில் முடிவது பற்றி!
Next articleஅஷ்டமச் சனி நடக்கும் போது திருமணம் செய்யலாமா!