30 பெண்களுடன் பிரபல தொழிலதிபர்…அசர வைக்கும் சொகுசு வாழ்க்கை: ஆதரவு தெரிவிக்கும் மனைவி!

0
438

அவுஸ்திரேலியாவின் பிரபல தொழிதிபர், தான் பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதை தனது மனைவி ஆதரிக்கிறார் என பெருமையாக கூறுகிறார்.

மெல்போர்ன் நகரில் வசித்து வரும் Travers Beynon(46) மில்லியனாவார், இவர் தனது மனைவியுடன் $3.7million மதிப்புள்ள சொகுசு பங்களாவில் வசித்து வருகிறார்.

குடி, கும்மாளம் , பெண்கள் தொடர்பு ஆகிய பெயருக்கு சொந்தக்காரான இவர், தான் செய்வது அனைத்தும் தனது மனைவிக்கு தெரிந்துதான் செய்வதாக கூறியுள்ளார்.

இவ்வாறு நடந்துகொள்வதில் எவ்வித தவறும் கிடையாது, மனைவிக்கு தெரியாமல் நான் பல பெண்களுடன் தொடர்பில் இருந்தால் தான் தவறு.

ஆனால், நான் அவ்வாறு செய்யவில்லை. எனது படுக்கையறையில் 30 பெண்கள் இருப்பார்கள். இது எனது மனைவியின் சம்மதத்துடன் நடக்கிறது.

Travers கூறியதாவது, நானும் எனது மனைவி Taesha(27) மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறோம், 8 வருடங்களுக்கு முன்னாள் எனது Taesha- வை திருமணம் செய்துகொண்டேன். திருமணம் ஆன நாள் முதல் இன்றுவரை எனது அனைத்து விடயங்களையும் எனது மனைவியிடம் பகிர்ந்துகொள்வேன்.

Taesha கூறியதாவது, எனது கணவர் மற்ற பெண்களுடன் இருப்பதை பார்த்தால் எனக்கு பொறாமையாக இருக்காது, நான் அவருடன் டேட்டிங் செல்ல ஆரம்பித்தபோதே, அவருக்கு பிற பெண்களுடன் தொடர்பு இருப்பது தெரியும்.

இருப்பினும், அவரை திருமணம் செய்துகொள்ளும் போது அவரது அனைத்து சுக துக்கங்களையும் சேர்த்துதான் திருமணம் செய்துகொண்டேன்.

வேறு பெண்களுடன் இவ்வாறு உறவில் இருக்கும் காரணத்தால் அப்பெண்கள் இதனை பயன்படுத்தி அவரை அபகரித்துக்கொள்வார்கள் என்று கிடையாது. எனது கணவருக்கு நான் தான் மனைவி, அதில் எவ்வித மாற்றமும் கிடையாது என கூறியுள்ளார்.

Travers Beynon தனது சொந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தை, சட்டவிரோதமாக தனது புகையிலை நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதாக பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: