30 காதலிகள் இன்னும் அழகிய 5 காதலிகள் வேண்டும் பரபரப்பு அறிவிப்பு!

0
423

அவுஸ்திரேலியாவின் பிரபல தொழிலதிபர் Travers Beynon தனக்கு 5 காதலிகள் வேண்டும் என புதிய விளம்பரம் ஒன்றை கொடுத்துள்ளார்.

இவரது சொத்து மதிப்பு £142million ஆகும். தொழில் முனைவர் மற்றும் முன்னாள் அவுஸ்திரேலிய கால்பந்து வீரரான இவர், புகையிலை உற்பத்தி தொழில் செய்துவருகிறார். நாடு முழுவதும் சுமார் 255 கடைகள் உள்ளன.

உலகின் பிரபல தொழிலதிபராக இருந்தாலும், பெண்களுக்கு மத்தியில் வாழ்வது, பெண்களை அதிகமாக விளம்பரத்திற்கு பயன்படுத்துவது என்பது இவருக்கு பிடித்தமான ஒன்று.

குறிப்பாக, இவருக்கு திருமணமாகி 4 பிள்ளைகள் உள்ளனர். இவருக்கு ஏற்கனவே 30 காதலிகள் உள்ள நிலையில், தற்போது தனக்கு புதிதாக 5 காதலிகள் வேண்டும் என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளம்பரம் அளித்துள்ளார்.

மெல்போர்னில் உள்ள தனது ஆடம்பர மாளிகையை அலங்கரிக்க, காதலிகள் வேண்டும் என விளம்பரம் அளித்துள்ளார். ஆடம்பர மாளிகையின் மதிப்பு $70 million ஆகும்.

இவர் அளித்துள்ள விளம்பரத்தில், நீங்கள் நல்லவராக இருந்தால் சொர்க்கத்திற்கு செல்வீர்கள். மோசமானவர்களாக இருந்தால் நரகத்திற்கு செல்வீர்கள். அப்படி மோசமாக இருக்க ஆசைப்பட்டால் எனது ஆடம்பர மாளிகைக்கு வாருங்கள்.

அங்கு, உங்களுக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்படும்.

15 படுக்கையறைகள், 19 குளியலறைகள் மற்றும் நான்கு சமையலறைகளுடன் கூடிய வீடு மற்றும் நீங்கள் பயணம் செய்வதற்கான விமான வசதிகளுடன் ஏற்பாடு செய்து தரப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவர், சமீபத்தில் தனது வாழ்க்கை பற்றி கூறுகையில், நான் எந்த மாதிரியான வாழ்க்கை வாழ்கிறேன் என்பது என்னுடைய மனைவிக்கு தெரியும், அவளுடைய சம்மதத்துடன் தான் நான் இவ்வாறு பெண்களுடன் இருக்கிறேன்.

வாழ்க்கை துணையிடம் எதனையும் மறைத்தால் தான் தவறு, இதுபோன்ற வாழ்க்கையில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை என கூறியுள்ளார்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: