Home thatstamil one india tamil oneindia tamil 3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல்! பாவ மன்னிப்பு ரகசியம் அம்பலமானதால் தற்கொலை செய்துகொண்ட பெண்!

3 ஆண்டுகளுக்கு பிறகு வெளியான தகவல்! பாவ மன்னிப்பு ரகசியம் அம்பலமானதால் தற்கொலை செய்துகொண்ட பெண்!

0
539

பாதிரியார் ஒருவரிடம் பெற்ற பாவ மன்னிப்பு அம்பலமானதால் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலத்தை சேர்ந்த லில்லி என்பவர் மூன்று ஆண்டுகளுக்கு முன் தற்கொலை செய்து கொண்டார். தற்போது லில்லியின் சகோதரி லைலாமா ஜார்ஜ் என்பவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

அய்ரூர் செயின்ட் ஜான் தேவாலயத்தில் பணியாற்றும் பாதிரியார் ஒருவரிடம் மூன்று ஆண்டுகளுக்கு முன் என் சகோதரி பாவ மன்னிப்பு கோரினார்.

அவர் கல்லூரியில் படித்த போது ஏற்பட்ட தவறு குறித்த பாவ மன்னிப்பு அது. அந்த தகவலை மற்றொரு பெண்ணிடம் அந்த பாதிரியார் கூறிவிட்டார். அந்த பெண்ணோ பலர் முன்னிலையில் என் சகோதரி குறித்த ரகசியத்தை போட்டு உடைத்து விட்டார்.

இதனால் மன உளைச்சல் ஏற்பட்டு என் சகோதரி தற்கொலை செய்து கொண்டார். அந்த பாதிரியாருக்கும், என் சகோதரியின் கணவருக்கும் முன் விரோதம் உண்டு. இதன் காரணமாகவே, அந்த பாதிரியார் அப்படி செயல்பட்டுள்ளார். இப்பிரச்னையை நாங்கள் விடுவதாக இல்லை. இதுகுறித்து பொலிசில் புகார் அளிக்க இருக்கிறோம் என கூறியுள்ளார்.

கேரளாவில் பாதியார்கள் மீதான பாலியல் குற்றச்சாட்டு அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Previous articleஇது தான் விசேஷமாம்! சவப்பெட்டி நீரை அருந்த அலைமோதும் மக்கள் கூட்டம்!
Next articleஆடி மாதத்தில் பிறந்தவரா நீங்கள்? அப்படியென்றால் நீங்கள் அதிகமாக இப்படித்தான் நடந்துகுவீங்க‌!