3 பேராசிரியர்களுக்கு அழைப்பாணை, ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் தற்கொலை!

0
769

3 பேராசிரியர்களுக்கு அழைப்பாணை, ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் தற்கொலை!

ஐஐடி மாணவி பாத்திமாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேராசிரியர்களுக்கு மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் அழைப்பணை அனுப்பி உள்ளனர். கேரள மாணவி பாத்திமா சென்னை ஐ.ஐ.டி.யில் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் தந்தை அப்துல்லா சென்னை சென்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து பேசியதனையடுத்து சென்னையில் உள்ள கேரள சமாஜத்தில் தங்கி இருந்த அப்துல்லாவிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, மாணவி பாத்திமாவின் மரணம் தொடர்பாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் பற்றி மத்திய குற்றப்பிரிவு பொலிஸார் விசாரணை நடத்திய போது தன்னிடம் இருந்த சில ஆதாரங்களை மாணவியின் தந்தை காவல்துறையினரிடம் ஒப்படைத்தார்.

இந்த நிலையில், மாணவி பாத்திமாவின் மரணத்தில் தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படும் 3 பேராசிரியர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்த முடிவு செய்த மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனை ஏற்று 3 பேரும் இன்று அல்லது நாளை நேரில் முன்னிலையாவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாணவி மரணம் தொடர்பாக ஐ.ஐ.டி.க்கு நேரில் சென்று பேராசிரியர்களிடம் காவல்துறையினர் ஏற்கனவே விசாரணை நடத்தி இருப்பது குறிப்பிடத்தக்கது

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஅச்சத்தில் மக்கள்! வியாழேந்திரனின் அடாவடி ஆரம்பம்!!
Next article10 மில்லியன் பேர் ரசித்த காட்சி! ஷாப்பிங் மாலில் வீட்டுப்பாடத்தை முடித்த சிறுவன்! அதுவும் எப்படி தெரியுமா?