10 மில்லியன் பேர் ரசித்த காட்சி! ஷாப்பிங் மாலில் வீட்டுப்பாடத்தை முடித்த சிறுவன்! அதுவும் எப்படி தெரியுமா?

0

10 மில்லியன் பேர் ரசித்த காட்சி! ஷாப்பிங் மாலில் வீட்டுப்பாடத்தை முடித்த சிறுவன்! அதுவும் எப்படி தெரியுமா?

இன்றைய காலத்தில் அனைத்தும் கணினிமயமாக்கப்பட்டு வருகின்றதை நாம் கண்கூடாக அவதானித்து வருகின்றோம். பிரேசிலில் உள்ள ஷாப்பிங் மால் ஒன்றில் உள்ள எலக்டரானிக் கடையில் பள்ளிச் சிறுவன் ஒருவன் அங்கிருந்த டேப்லட்டையும், இன்டர்நெட்டையும் பயன்படுத்தி வீட்டுப்பாடத்தினையே முடித்துள்ள காட்சி தீயாய் பரவி வருகின்றது. குறித்த சிறுவனின் பெயர் கில்ஹெர்ம் சாண்டியாகோ(10) எனவும், மேலும் கடைக்காரரிடம் முறையாக அனுமதி பெற்ற பின்பு இவ்வாறு பயன்படுத்தி வீட்டுப்பாடத்திற்கு குறிப்பு எடுத்துள்ளதும் தெரியவந்துள்ளது. வீட்டில் இணைய சேவை இல்லை என முடங்கி விடாமல் ஷாப்பிங் மால் வந்து உதவி கேட்ட அந்த சிறுவன் வாழ்க்கையில் கண்டிப்பாக முன்னேற்றம் அடைவான் எனவும் சிறுவனுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, கடை சாதனத்தை வீட்டுப்பாடம் எழுத கொடுத்த கடைக்காரரையும் வாழ்த்தி வருகின்றனர். மேலும் குறித்த காட்சியினை 10 மில்லியன் பேர் அவதானித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous article3 பேராசிரியர்களுக்கு அழைப்பாணை, ஐ.ஐ.டி மாணவி பாத்திமாவின் தற்கொலை!
Next articleஅனைவரையும் பின்னுக்கு தள்ளிய பிகில், தமிழ் சினிமாவின் நம்பர் 1 பிகில்!