Home Rasi Palan ராசி பலன் Today Rasi Palan 23.07.2018 இன்றைய ராசிப்பலன் திங்கட்கிழமை!

23.07.2018 இன்றைய ராசிப்பலன் திங்கட்கிழமை!

0
1117

23.07.2018 இன்றைய ராசிப்பலன் திங்கட்கிழமை!

இன்றைய பஞ்சாங்கம்
23-07-2018, ஆடி 07, திங்கட்கிழமை, ஏகாதசி திதி மாலை 04.24 வரை பின்பு வளர்பிறை துவாதசி. அனுஷம் நட்சத்திரம் பகல் 12.53 வரை பின்பு கேட்டை. நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 0. ஏகாதசி விரதம். பெருமாள் வழிபாடு நல்லது. தனிய நாள். சுபமுயற்சிகளை தவிர்க்கவும்.

மேஷம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானம் தேவை. மற்றவர்களின் வீண் பேச்சுக்கு ஆளாவீர்கள். எந்த செயலிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். மருத்துவ செலவுகள் செய்ய நேரிடும். அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசாமல் இருப்பது நல்லது. பயணங்களை தவிர்க்கவும்.

ரிஷபம்
இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்தும் நிறைவேறும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு அதிகரித்தாலும் அதற்கேற்ப நற்பலன்களும் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் கிட்டும். கடன் சுமை குறையும். உடல்நிலை சீராகும்.

மிதுனம்
இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடைபெறும். தொழில் சம்பந்தமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். புதிய பொருட்கள் வாங்க அனுகூலமான நாளாகும். பிள்ளைகளின் தேவைகள் நிறைவேறும். சுபகாரியங்கள் கைகூடும்.

கடகம்
இன்று நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை சிந்தித்து செயல்படுவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். வியாபாரத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வேலையில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள்.

சிம்மம்
இன்று உறவினர்களிடம் வீண் கருத்து வேறுபாடுகள் தோன்றும். அலுவலகத்தில் தேவையற்ற இடமாற்றத்தால் மன உளைச்சல் உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் ஏமாற்றத்தை அளிக்கும். தொழிலில் புதிய யுக்திகளை பயன்படுத்தி முன்னேற்றம் அடைவீர்கள். பண கஷ்டம் தீரும்.

கன்னி
இன்று உங்களுக்கு சுபசெய்திகள் கிடைக்கப்பெற்று மனமகிழ்ச்சி அடைவீர்கள். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். தொழிலில் இருந்த போட்டிகள் விலகும். எடுக்கும் புதிய முயற்சிகள் அனைத்திலும் அனுகூலப்பலன் உண்டாகும்.

துலாம்
இன்று பிள்ளைகளால் வீண் பிரச்சனைகள் ஏற்படக்கூடும். வேலை சம்பந்தமான வெளியூர் பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். பணவரவு சுமாராக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். கடன்கள் குறையும். பெரியவர்களின் நட்பு கிடைக்கும்.

விருச்சிகம்
இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் மிக சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் ஒற்றுமையான சூழ்நிலை உருவாகும். உத்தியோகத்தில் நல்ல வாய்ப்புகள் வந்து சேரும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கைகூடும். வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிட்டும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

தனுசு
இன்று குடும்பத்தில் தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படக்கூடும். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடுகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது.

மகரம்
இன்று குடும்பத்தில் சுபசெலவுகள் செய்ய நேரிடும். பிள்ளைகள் அனுகூலமாக இருப்பார்கள். அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் நிறைவேறும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரும். தொழிலில் வெளிவட்டார தொடர்பு மூலம் அனுகூலம் கிட்டும். சேமிப்பு உயரும்.

கும்பம்
இன்று உத்தியோகஸ்தர்களுக்கு அவர்களது திறமைகள் மேலதிகாரிகளால் பாராட்டப்படும். வியாபாரத்தில் புதிய நபர் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தில் கணவன் மனைவியிடையே இருந்த மாற்று கருத்துக்கள் நீங்கும். திருமண முயற்சிகளில் வெற்றி கிட்டும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

மீனம்
இன்று உங்களுக்கு ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்படலாம். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் கால தாமதம் உண்டாகும். உத்தியோகத்தில் சக தொழிலாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. திடீர் பணவரவு உண்டாகும். தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் அனுகூலப் பலன் உண்டாகும்.

Previous articleஇரத்த உறவுகள் மற்றும் நெருங்கிய சொந்தத்தில் திருமணம் செய்யாதீர்கள்! காரணம் என்ன தெரியுமா?
Next articleஇலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் ஒருவருக்கு எதிராக சற்று முன்னர் அதிரடி நடவடிக்கை!