2023 சனி பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குவதால் யோகமா? சோகமா?

0

மீன ராசிக்காரர்களே சனிபகவான் 2023 ஆம் ஆண்டு ஜனவரி 17 ஆம் தேதி கும்ப ராசியில் பயணம் செய்யப்போகிறார். ஜனவரி 30 ஆம் தேதி சனி பகவானுக்கு அருகில் சூரியன் வரும் போது அஸ்தமனம் அடைகிறார். பின்பு மார்ச் மாதம் 6ஆம் தேதி சனி பகவான் உதயமாகிறார். 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17ஆம் தேதி வக்ர மடையும் சனிபகவான் நவம்பர் 4 ஆம் தேதி மீண்டும் நேர்கதியில் பயணம் செய்வார்.

மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி ஆரம்பிக்கும் போது என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கப்போகிறது என்று பார்ப்போம் கடந்த இரண்டரை ஆண்டு காலம் லாப சனியாக பயணம் செய்த சனிபகவான் இனி ஏழரை சனியில் விரைய சனியாக பயணம் செய்யப்போகிறார். இந்த சனிப்பெயர்ச்சி காலத்தில் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், குடும்பத்தில் சந்தோசம், நிம்மதி எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

சனி பகவான் 12ஆம் வீடான அயன சயன ஸ்தானத்தில் பயணம் செய்வதால் பணம் விரையங்கள் மருத்துவ செலவாக ஏற்படும் எனவே இதை தடுக்க சுப செலவாக மாற்றுங்கள். சனி பகவான் கும்ப ராசியில் அமர்ந்து உங்களின் தனம், குடும்ப வாக்கு ஸ்தானமான இரண்டாவது ஸ்தானத்தை பார்க்கிறார் சனி. வாயினால் வம்பு வழக்குகள் வரலாம். நாவடக்கம் தேவை. வாக்குக் கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம்.

உங்களுக்கு எதிர்பார்த்த இடத்தில் நல்ல சம்பளத்தில் வேலை கிடைப்பதோடு வேலையில் ஊதிய உயர்வு கிடைக்கும். பதவி உயர்வு ஒரு சிலருக்கு அமையும். குடும்ப ஸ்தானத்தை சனிபகவான் பார்வையிடுவதால் பிரச்சினைகள் வராமல் இருக்க விட்டுக்கொடுத்து நடவுங்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். செலவு செய்ய நோய் நொடிகள் எட்டிப்பார்க்கும். மருத்துவ ஆலோசனைகளை பெறலாம். எதிரிகளால் மறைமுகத் தொல்லைகள் அதிகரிக்கும்.

தந்தைக்கு நன்மை ஏற்படும். வெளிநாட்டு பயணங்கள் நன்றாக அமையும். பலருக்கு வெளிநாடுகளில் வேலை கிடைக்கும் யோகம் கிடைக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் சிக்கலை தரும். போட்ட முதலீடு ,கொடுத்த பணம் திரும்பி வருதல் கடினம் என்பதால் நிதானித்து செயல்படவும். அகலக்கால் வைக்க வேண்டாம். வேலை விசயத்தில் யாருக்கும் சிபாரிசு செய்ய வேண்டாம். பணம் கொடுக்கல் வாங்கலால் உறவுகள்,நட்புகள் பகையாகும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். தாய்,தந்தைக்கு மருத்துவ செலவு வைக்கும் என்பதால் அவர்களை நன்கு கவனித்துக்கொள்ளவும்.

மாணவர்கள் படிப்பில் அதிக கவனமும் அக்கறையும் செலுத்துவது நல்லது. கல்விக் கடன்கள் எளிதாக கிடைக்கும். சனிபகவான் தவறு செய்தால் மட்டுமே தண்டிப்பார். வம்பு வழக்குகளில் இருந்து ஒதுங்கி இருங்கள்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 18.11.2022 Today Rasi Palan 18-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next article2023 சனி பெயர்ச்சி ஜென்ம சனி என்றாலும் தடைகளை தாண்டி ஜெயிக்கப்போகும் ராசி நீங்கதான்!