இன்றைய ராசிபலன் 18.11.2022 Today Rasi Palan 18-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!

0

இன்று 18-11-2022 கார்த்திகை மாதம் 02ம் நாள் வெள்ளிக்கிழமை ஆகும். இன்று நவமி திதி காலை 09.33 வரை பின்பு தேய்பிறை தசமி. இன்று பூரம் நட்சத்திரம் இரவு 11.08 வரை பின்பு உத்திரம். இன்றைய நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. இன்று அம்மன் வழிபாடு நல்லது.

இராகு காலம்: பகல் 10.30-12.00, எம கண்டம்: மதியம் 03.00-04.30, குளிகன்: காலை 07.30 -09.00, சுப ஹோரைகள்: காலை 06.00-08.00, காலை 10.00-10.30. மதியம் 01.00-03.00, மாலை 05.00-06.00, இரவு 08.00-10.00

மேஷம் ராசிக்கு:

இன்று நீங்கள் சோர்வுடனும் சுறுசுறுப்பின்றியும் காணப்படுவீர்கள். எதிர்பாராத செலவுகளால் பண நெருக்கடிகள் உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் சிந்தித்து செயல்பட்டால் அனுகூலப் பலன் கிட்டும். பிள்ளைகள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். உறவினர்கள் உதவியாக இருப்பார்கள்.

ரிஷபம் ராசிக்கு:

இன்று பொருளாதார நெருக்கடியால் குடும்பத்தில் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். பேச்சில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. தொழிலில் புதிய மாற்றங்கள் செய்வதன் மூலம் லாபம் கிட்டும்.

மிதுனம் ராசிக்கு:

இன்று நீங்கள் புது பொலிவுடனும், தெம்புடனும் காணப்படுவீர்கள். வியாபார ரீதியான பயணங்களால் நல்ல மாற்றங்கள் ஏற்படும். சுபமுயற்சிகளில் இருந்த தடைகள் விலகி அனுகூலமான பலன் கிட்டும். உறவினர்கள் வருகை மகிழ்ச்சியை தரும். பிள்ளைகள் படிப்பில் ஆர்வமுடன் ஈடுபடுவார்கள்.

கடகம் ராசிக்கு:

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் மனஉறுதியோடு செய்தால் மட்டுமே வெற்றி அடைய முடியும். குடும்பத்தில் பிள்ளைகளால் செலவுகள் அதிகரிக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இருந்த பிரச்சினைகள் தீரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும்.

சிம்மம் ராசிக்கு:

இன்று உங்களுக்கு பிள்ளைகளால் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். நண்பர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் குறைந்து ஒற்றுமை கூடும். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி லாபம் உண்டாகும். சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியை தரும்.

கன்னி ராசிக்கு:

இன்று உங்களுக்கு பணவரவு சுமாராக இருக்கும். குடும்பத்தில் அமைதியற்ற நிலை நிலவும். ஆடம்பர செலவுகளால் கையிருப்பு குறையும். உடன் பிறப்புகளுக்கிடையே ஒற்றுமை நிலவும். வியாபாரத்தில் இருந்த போட்டி பொறாமைகள் விலகும். சிலருக்கு வெளியூர் செல்லும் வாய்ப்பு கிட்டும்.

துலாம் ராசிக்கு:

இன்று உங்களுக்கு குடும்பத்தில் நிலவிய பிரச்சினைகள் விலகி மன நிம்மதி உண்டாகும். தொழில் வளர்ச்சிக்காக போட்ட புதிய திட்டங்கள் வெற்றியை தந்து லாபம் பெருகும். பொன் பொருள் சேரும். பெண்களுக்கு பணிசுமை குறையும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சேமிப்பு உயரும்.

விருச்சிகம் ராசிக்கு:

இன்று உங்களுக்கு பொருளாதார நிலை சிறப்பாக அமையும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரம் சிறப்பாக நடைபெறும். வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். கொடுத்த கடன் வசூலாகும்.

தனுசு ராசிக்கு:

இன்று குடும்பத்தில் உறவினர்கள் வருகையால் வீண் செலவுகள் ஏற்படலாம். பெரிய மனிதர்களின் விரோதத்திற்கு ஆளாக நேரிடும். நண்பர்களின் உதவியால் கடன் பிரச்சினை குறையும். வியாபார விஷயமாக மேற்கொள்ளும் பயணம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும்.

மகரம் ராசிக்கு:

இன்று உங்களுக்கு மன கஷ்டம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் அறிமுகம் இல்லாதவர்களிடம் வீண் வாக்கு வாதங்களை தவிர்க்கவும். உத்தியோகஸ்தர்களுக்கு பணியில் கவனம் தேவை. பயணங்களை தவிர்க்கவும்.

கும்பம் ராசிக்கு:

இன்று உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். குடும்பத்தில் திடீரென்று சுபசெய்திகள் வந்து சேரும். உற்றார் உறவினர்கள் நட்புடன் இருப்பார்கள். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். வெளியூர் பயணங்களால் அனுகூலம் உண்டாகும். வியாபார ரீதியாக புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.

மீனம் ராசிக்கு:

இன்று இனிய செய்தி இல்லம் தேடி வரும். உறவினர்கள் வருகை உள்ளத்திற்கு மகிழ்வை தரும். தொழிலில் புதிய சலுகைகளை அறிமுகபடுத்தி லாபம் பெறுவீர்கள். சுபகாரிய முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட்கள் வீடு வந்து சேரும். பயணங்களில் புதிய நட்பு கிடைக்கும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇன்றைய ராசிபலன் 16.11.2022 Today Rasi Palan 16-11-2022 Today Tamil Calander Indraya Rasi Palan!
Next article2023 சனி பெயர்ச்சியால் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி தொடங்குவதால் யோகமா? சோகமா?