2022ல் இந்த 4 ராசிக்காரர்களின் தலைவிதியை மாற்றப்போகும் குரு பகவான்! செல்வமும், புகழும் தேடி வருவதால் வாழ்வில் உயர்வடையப்போகும் ராசிக்காரர்கள்!
2022 புத்தாண்டில் பல கிரகங்களின் நிலைகள் மாற்றமாவதால் பலரின் தலைவிதியே மாறப் போகின்றது. ஜோதிடத்தில், வியாழன் கிரகத்திற்கு ஒரு சிறப்பு இடம் உண்டு, அது கடவுள்களின் குருவாக கருதப்படுகிறது.
ஜோதிட சாஸ்திரப்படி இந்த கிரகத்தின் பெயர்ச்சி மிகவும் முக்கியமானது. இந்த குரு பெயர்ச்சியால் எந்த ராசிக்கு என்ன பலன் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
கன்னி ராசிக்காரர்கள்!
கன்னி ராசியினருக்கு புதிய ஆண்டில் குரு பல சுப பலன்களை ஏற்படுத்துவார். ஆண்டின் மத்தியில் பண ஆதாயம் உண்டாகும். முதலீட்டில் அதிக லாபம் கிடைக்கும். குறிப்பாக ரியல் எஸ்டேட்டில் நல்ல லாபம் இருக்கும். கௌரவம் உயரும்.
விருச்சிகம் ராசிக்காரர்கள்!
வியாழன் மாற்றம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களைத் தருவது மட்டுமல்லாமல், பணம் சம்பாதிக்க பல வாய்ப்புகளைத் திறக்கும். 2022 ஆம் ஆண்டு வேலை தேடுபவர்களுக்கு பல வாய்ப்புகளை கொண்டு வரும். நிறைய நிதி ஆதாயம் உண்டாகும். இதன் காரணமாக உங்கள் வங்கி இருப்பு கணிசமாக அதிகரிக்கும்.
தனுசு ராசிக்காரர்கள்!
2022-ம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு செல்வம் உயரும் வாய்ப்பு உள்ளது. பல பொன்னான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். நிலம் மற்றும் வீட்டில் முதலீடு செய்வது உங்கள் மூலதனத்தை அதிகரிக்கும். வியாபாரிகளுக்கு அதிக லாபம் கிடைக்கும்.
கும்பம் ராசிக்காரர்கள்!
2022-ம் ஆண்டு வருமானம் உயரும் வாய்ப்புகள் அதிகம், முன்னேற்றம் ஏற்படும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். புதிய தொழில் மற்றும் முதலீடுகளுக்கு இது மிகவும் நல்ல நேரம், வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.