Home Rasi Palan ராசி பலன் Sani Peyarchi Palangal 2020 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சியில் கடும் குழப்பமடையும் எண்காரர்கள் யார் தெரியுமா? உடனே படிக்கவும் !

2020 ஆம் ஆண்டு சனிப்பெயர்ச்சியில் கடும் குழப்பமடையும் எண்காரர்கள் யார் தெரியுமா? உடனே படிக்கவும் !

0
752

உங்கள் வாழ்க்கையின் மிகப்பெரிய ரகசியங்கள் உங்களுடைய பிறந்த எண்ணில் இருக்கிறது.

ஏனெனில் நமது எதிர்காலத்தை நிர்ணயிப்பதில் நம்முடைய பிறந்த எண் முக்கியப்பங்கை வகிக்கிறது.

நியூமராலஜியின் படி நம்முடைய கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர்காலம் என அனைத்தும் நம்முடைய பிறந்த தேதியை வைத்து கணிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

அந்தவகையில் இரண்டாம் எண்னை கூட்டு எண்ணாக கொண்டவர்களின் முழு வாழ்க்கை ரகசியங்களையும் தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் யாரையும் சாராமல் சுயஉழைப்பால் முன்னேறும் திறமை உள்ளவர்கள். எடுத்த வேலையை சரியாக முடிக்கும், எடுத்த முடிவில் மாறாமல் இருக்கும் மனஉறுதி உடையவர்.

இந்த சனிப்பெயர்ச்சியில் கடும் குழப்பத்திற்குப் பிறகு மனதில் தெளிவு பிறக்கும்.

மனதை ஒருமுகப்படுத்தி உழைக்கத் தொடங்குவீர்கள். மற்றவர்களின் மனதைத் துல்லியமாக அறிந்து கொள்வீர்கள்.

பிள்ளைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். அவர்களும் உங்கள் பேச்சைக் கேட்டு நடப்பார்கள்.

மனதை அழுத்திக் கொண்டிருந்த பல பிரச்னைகள் விலகும். வம்பு, வழக்குகளில் ஓரளவு சாதகமான திருப்பங்கள் ஏற்படும்.

அதனால் விட்டுக் கொடுத்து, வழக்குகளை முடித்துக் கொள்ளவும். பிடிவாதங்களைத் தளர்த்தி, அனைவரிடமும் ஒற்றுமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

குடும்பத்தினர்கூட உங்கள் பெருந்தன்மையை உணராமல், உங்களுடன் வழக்குத் தொடுக்கலாம்.

உங்கள் பேச்சில் கடமை உணர்ச்சி மிகுந்திருக்கும். நியாயவாதி என்று பெயரெடுப்பீர்கள். இந்தக் காலகட்டத்தில் புதியவர்களுடன் நட்பை ஏற்படுத்திக் கொள்வீர்கள். சில தடைகள் ஏற்பட்டாலும் முயற்சிகள் அனைத்தும் வெற்றிவாகை சூடும். கவலைகள் படிப்படியாகக் குறையும்.

புதிய வீட்டுக்குக் குடிபெயரும் வாய்ப்பு உண்டாகும். சிலருக்கு வழக்கொன்றில் வழங்கப்படும் சாதகமான தீர்ப்பினால் வருமானம் பெருகும். தடைபட்டிருந்த பயணங்களை மேற்கொள்வீர்கள்.

நெருங்கிய உறவினர்கள், நண்பர்களிடம் ஏற்பட்ட விரோதங்கள் மறையும். பொருளாதார முன்னேற்றம் ஏற்படும்.

நண்பர்கள் எதிர்பார்த்ததற்கும் மேலான உதவிகளைச் செய்வார்கள். உடல்நலம் சிறப்படையும். அரசுத் துறைகளின் மூலம் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.

ஆன்மிகச் சுற்றுலா சென்று வருவீர்கள். எங்கும், எப்போதும் பேச்சில் நிதானம் தேவை.

மாணவமணிகள் கல்வியிலும், விளையாட்டிலும் வெற்றிக்கொடி நாட்டுவீர்கள். ஆனாலும் ஒருமுறைக்கு இருமுறை படிக்கவும்.

பெற்றோர், ஆசிரியர்களின் ஆதரவைப் பெறுவீர்கள். வாகனங்களை கவனமாக இயக்குங்கள். அமிலம் சம்பந்தமான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரிக்கையாக இருங்கள்.

பரிகாரம்
திங்கட்கிழமை தோறும் அருகிலிருக்கும் அம்மன் ஆலயத்திற்குச் சென்று வரவும்.
மல்லிகையை கட்டி அருகிலிருக்கும் அம்மன் கோயிலுக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்து வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்

“ஓம் ஸ்ரீமாத்ரே நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 9 முறை சொல்லவும்.

அதிர்ஷ்ட எண்கள்

2, 6, 9.

அதிர்ஷ்ட கிழமைகள்

திங்கள்

செவ்வாய்

வியாழன்

வெள்ளி

Previous articleஅரை நிர்வாணமாக சுற்றிய ஸ்ரீரெட்டியின் குளியல் அரை வீடியோ பார்க்க ஆசையா?
Next articleநியூமராலஜிப்படி இந்த ஆளுமை எண்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பார்களாம்!