2020 ம் ஆண்டு பணப்பிரச்சினையால் திக்குமுக்காட போகும் ராசி எது தெரியுமா?

0

மேஷம் 2020 ஆம் ஆண்டு பணம் சம்பாதிக்க பல நல்ல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். இருப்பினும், இந்த வாய்ப்புக்களை எப்படி பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது உங்களுடையது. இந்த வருடத்தில் ஏதேனும் நிதி சிக்கல்களை சந்தித்தால், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவார்கள். வருடத்தின் மைய பகுதியில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். இந்த வருடம் நிதி அம்சத்தில் இருந்து பயனளிக்கும் பல பயணங்களை மேற்கொள்வீர்கள்.

ரிஷபம்
2020 ஆம் ஆண்டு நிதி விஷயத்தைப் பொறுத்தவரை ஒரு கலவையான வருடமாக இருக்கும். வருடத்தின் ஆரம்ப காலத்தில் நிதி சலுகைகளைப் பெறும் அதே சமயம் நிதி இழப்பையும் சந்திப்பீர்கள். இந்த காலத்தில் புதிய வேலைகள் தொடங்குவதைத் தவிர்க்கவும். மேலும் முக்கியமான பண முதலீடுகளையும் தவிர்க்கவும். ஆண்டின் தொடக்கத்தில் மற்றும் செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறீர்கள். தேவைப்படும் போதெல்லாம் உங்களுக்கு நிதி உதவி கிடைக்கும் என்றாலும், அது உங்கள் சுமையை அதிகரிக்கக்கூடும்.

மிதுனம்
2020ஆம் ஆண்டு பணத்தின் அடிப்படையில் சவால்களை நிறைந்ததாக இருக்கும். கிரகங்களின் மோசமான நிலையால் பொருளாதார முடிவுகளை கவனமாக எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திப்பீர்கள். வருடத்தின் ஆரம்ப காலத்தில் எந்த ஒரு பிரச்சனையையும் சந்திக்காததால், ஆரம்ப காலம் சிறப்பாக இருக்கும். ஆனால் போக போக நிலைமை கடினமாக இருக்கும். லாபம் எதிர்பார்க்கும் பல விஷயங்களில் நீங்கள் மாற்றத்தை சந்திக்க நேரிடும்.

கடகம்
2020 ஆம் ஆண்டு நிதி முன்னணியில் கலவையாக இருக்கும். அதிகப்படியான செலவால் பல நிதி சிக்கல்களை சந்திப்பீர்கள். வருடத்தின் ஆரம்ப காலம் சிறப்பாக இருக்கும். ஆனால் இந்த காலக்கட்டத்திற்கு பின் போராட வேண்டியிருக்கும். இக்காலத்தில் எந்த ஒரு பெரிய பொருளாதார பர்வர்த்தனை அல்லது முதலீட்டையும் நன்கு சிந்தித்துக் கொள்ளுங்கள். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள், இல்லாவிட்டால் பணம் கைக்கு மீண்டும் வராது.

சிம்மம்
இந்த வருடம் பணம் சம்பாதிப்பதில் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும். நல்ல நன்மைகளைப் பெற கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஜூலை முதல் நவம்பர் வரை உங்களுக்கு நல்ல காலம். இந்த காலத்தில் உங்கள் வருமானம் அதிகரிக்கும்.

கன்னி
2020 ஆம் ஆண்டு நிதி முன்னேற்றம் எதிர்பார்க்கப்படுகிறது. பணம் சம்பாதிப்பதற்கு பல வாய்ப்புக்களைப் பெறுவீர்கள். இந்த வருடம் உங்களின் பல விருப்பங்கள் நிறைவேறும். நீங்கள் புதிய வீடு அல்லது வாகனம் வாங்க நினைத்தால், இந்த வருடத்தில் அது வெற்றிகரமாக நடக்கும். உங்கள் நிதித் திட்டங்களின் படி நீங்கள் செலவு செய்வீர்கள் மற்றும் நிறைய சேமிப்பீர்கள்.

துலாம்
2020 ஆம் ஆண்டு நிதி ரீதியாக பயனளிக்காது. இருப்பினும் உங்கள் நிதி நிலையை மேம்படுத்த சில நல்ல வாய்ப்புக்களைப் பெறலாம். அதுவும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் மட்டுமே சாத்தியமாகும். அதன் பின் நிலைமை கடினமாகிவிடும் மற்றும் நிறைய போராட வேண்டியிருக்கும். இதுப்போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க செலவுகளைக் கட்டுப்படுத்துங்கள். உங்களுக்கு பழைய கடன் இருந்தால், இந்த ஆண்டு அதை திருப்பி செலுத்துவீர்கள்.

விருச்சிகம்
2020 ஆம் ஆண்டு உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். நிதி ரீதியாக வலுவாவதற்கு பல சிறிய மற்றும் பெரிய வாய்ப்புக்களைத் தொடர்ந்து பெறவீர்கள். இந்த வருடம் நிதி முடிவுகளை சிந்தித்து எடுத்தால், நீங்கள் நிறைய சேமிக்க முடியும். நிதி நெருக்கடிகள் காரணமாக உங்கள் பணி எதுவும் நிறுத்தப்படாது. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். ஏனெனில் அந்த பணம் திரும்ப வருவதற்கான வாய்ப்புக்கள் மிகக்குறைவு. ஒருவேளை நீங்கள் வங்கியில் கடன் வாங்கியிருந்தால், இந்த வருடம் அதை முழுமையாக செலுத்தி விடுபடுவீர்கள்.

தனுசு
சனியின் பார்வை 2020ஆம் ஆண்டு உங்கள் பக்கம் இருக்கும். நிதி அடிப்படையில் நல்ல முடிவுகளைப் பெறலாம். இருந்தாலும் நல்ல பலன்களைப் பெற மிகவும் கடுமையாக உழைக்க வேண்டும். எவ்வளவு அதிகமாக வேலை செய்கிறீர்களோ, அவ்வளவு நன்மை கிடைக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இந்த வருடம் எதிர்பாராத செலவுகள் அதிகரிக்கலாம். தேவையற்ற விஷயங்களுக்கு அதிகமாக பணம் செலவிடலாம். வருடத்தின் மையப்பகுதியில், நீங்கள் பணம் சேமிப்பதற்கான சரியான நேரம். மூதாதையர் சொத்து பிரச்சனை இந்த வருடம் தீர்க்கப்படலாம். சரியான முடிவை எடுப்பதன் மூலம் ஒரு பெரிய நன்மையைப் பெறுவீர்கள்.

மகரம்
2020 ஆம் ஆண்டு நிதி விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் பெரிய நெருக்கடியை சந்திக்க நேரிடும். வர வேண்டிய பணம் வராததால் சிக்கல்களும் ஏற்படலாம். வருமானத்தை விட செலவுகள் அதிகமாக இருக்கும். இந்த நிதி சிக்கல்களால் மனம் எதிர்மறை எண்ணங்களால் நிரப்பக்கூடும் மற்றும் பணம் சம்பாதிக்க குறுக்குவழியை தேடும். சனியின் பார்வையால் பணத்தைப் பொறுத்த வரை 2020 ஆம் ஆண்டு நீங்கள் அதிர்ஷ்டசாலி இல்லை என்றாலும், வருமானம் நன்றாக இருக்கும்.

கும்பம்
இந்த வருடம் நிதி அடிப்படையில் சாதாரணமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு சிறிய நன்மைகளைப் பெறலாம். இருப்பினும் நிதி சம்பந்தமாக எவ்வித ஆபத்தையும் எடுக்க வேண்டாம். குறிப்பாக பெரிய முதலீடு செய்யாதீர்கள். உங்களுக்கு போதுமான பணம் கிடைக்கும். ஆனால் அதை முறையாக பயன்படுத்த முடியாது. வெளிநாடுகளில் வேலை செய்பவர்களுக்கு இந்த ஆண்டு ஊதிய உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஆனால் அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும். ஜுன் முதல் நவம்பர் வரை உங்களுக்கு சிறந்த காலம். இக்காலத்தில் லாபம் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளது.

மீனம்
2020 ஆம் ஆண்டு எதிர்பார்த்த முடிவுகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். உங்களின் கடின உழைப்பும், முயற்சியும் பலனளிப்பதோடு, நல்ல செல்வம் கிடைக்கும். வருடத்தின் ஆரம்பத்தில் உங்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். பெரிய நிதி முன்னேற்றம் இருக்கும். நீண்ட காலமாக சிக்கியிருந்த பணம் இந்த வருடம் கிடைக்கும். வருடத்தின் மையப்பகுதியில் வீட்டில் உள்ள ஒரு நல்ல வேலை காரணமாக பெரிய செலவுகளை சந்திக்க நேரிடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleஇந்த ராசிக்காரருக்கு ராஜயோகம் தானாம் ! இந்தவாரம் நீங்கள் கவனமாக இருங்கள் ! இந்த வார ராசிபலன் !
Next articleToday Rasi Palan இன்றைய பஞ்சாங்கம் 18-12-2019 இன்றைய ராசி பலன் !