2019-ல் உங்க ராசிக்கு மிகவும் மோசமான மாதம் எது தெரியுமா? மிகவும் கவனமாக இருங்கள்!

0
1981

2019 பிறந்து ஒரு வாரம் நிறைவடைந்து விட்டது. இந்த ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வமும், குழப்பமும் உங்களுக்குள் அதிகரித்து கொண்டே இருக்கும். ஏற்கனவே உங்களுக்கு ராசியான நிறம் என்ன?, ராசியான எண் என்ன?, என்ன செய்ய வேண்டும்?, என்ன செய்யக்கூடாது? என பலவற்றையும் நீங்கள் தேடித்தேடி படித்திருப்பீர்கள். பொதுவாக பார்த்தால் இந்த ஆண்டு அனைத்து ராசியினருக்கும் ஓரளவிற்கு நல்ல பயன்களை வழங்கும் ஆண்டாகத்தான் இருக்கிறது.

ஆனால் ஆண்டு முழுவதும் நன்மை மட்டுமே நடக்காது தானே?. அதன்படி ஒவ்வொரு ராசியினருக்கும் ஒரு மாதம் மோசமான மாதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அந்த மாதத்தின் போது நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இந்த மாதமானது அவரவர் ராசியை பொறுத்து தீர்மானிக்கப்படுகிறது. இந்த பதிவில் உங்கள் ராசிப்படி எந்த மாதம் உங்களுக்கு சோதனைகள் நிறைந்த மாதமாக இருக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மோசமான மாதம் எதுவெனில் அது ஜூலைதான். இந்த மாதம் உங்களுக்கு சற்று கடினமான ஆண்டாக இருக்கும், இந்த மாதத்தில் உங்களுக்கு நிறைய சவால்கள் காத்திருக்கும். புதன் கிரகத்தின் காரணத்தால் பதட்டங்களும், முரண்பாடுகளும் அதிகரிக்கும். மேலும் ஆரோக்கியரீதியான பிரச்சினைகளும் எழும்.

ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் நவம்பர் மாதம் மோசமான மாதமாக இருக்கும். ராசியில் சந்திரன் இருப்பது ரிஷப ராசிக்காரர்களுக்கு மட்டுமல்ல நம் அனைவரின் நேரத்தையும் மோசமானதாக மாற்றக்கூடும். சந்திரனால் இந்த ராசிக்காரர்களுக்கு இந்த மாதத்தில் பல உறவு பிரச்சினைகள் ஏற்படலாம். அதேபோல அலுவலகத்திலும் பல பிரச்சினைகள் உண்டாகும். இந்த பிரச்சினைகள் டிசம்பர் மாதத்தில் சரியாகும்.

மிதுனம்
இவர்களுக்கு இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் மிகவும் சோதனையான மாதமாக இருக்கும். இந்த மாதத்தில் பல கிரகங்கள் உங்கள் ராசிக்கு வருவார்கள். இதனால் குழப்பம், பதட்டம் போன்ற பிரச்சினைகளும் தெளிவில்லாத முடிவுகள் எடுக்கவும் நேரிடும். எனவே எப்பொழுதும் இரண்டாவது முடிவுக்கு ஒரு முக்கியத்துவம் கொடுங்கள்.

கடகம்
கடக ராசிகாரர்களுக்கு மார்ச் மாதத்தில் உறவுரீதியிலான பல பிரச்சினைகள் ஏற்படலாம். சந்திரன் முழுவதும் ரிஷப ராசியில் இருப்பதால் உங்களுக்கு பாதிப்புகள் கொஞ்சம் குறைவாக இருக்கும். இருப்பினும் உறவுகள் தொடர்பான பிரச்சினைகளில் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்காதீர்கள்.

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதம் பல சவால்களை கொண்டுவரும். உங்களுக்கு ஏற்படும் மனஅழுத்தம் உங்களின் முடிவுகளை சிறப்பானதாக மாற்றும். ஒருவேளை உங்கள் பிறந்தநாள் இந்த மாதத்தில் வருவது உங்களுக்கு அவ்வளவு மகிழ்ச்சியானதாக இருக்காது. ஆண்டு இறுதியில் உங்களின் பிரச்சினைகள் குறைய வாய்ப்புள்ளது.

கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் சிறப்பான ஆண்டாக இருக்காது. இந்த மாதத்தில் அனைத்து செயல்களும் தாமதமாகவும், அசௌகரியமாகவும் நடக்கக்கூடும். மற்றவர்களை விட நீங்கள் அதிக சோதனைக்கு ஆளாவீர்கள், உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் பல தடைகள் ஏற்படும். குறிப்பாக உறவுகளில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் தவறானதாக இருக்கும். விரக்தி வரும்போது அமைதியாக இருக்க பழகிக்கொள்ளுங்கள்.

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டில் பிப்ரவரி மாதம் சோதனைகள் நிறைந்த ஆண்டாக இருக்கும். அனைவருமே வாழ்க்கையில் சமநிலையுடன் இருக்க வேண்டுமென்று விரும்புவார்கள், ஆனால் உங்களால் அவ்வாறு இருக்க இயலாது. உங்களின் மனநிலைகள் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். இதனால் அலுவலகரீதியாகவும், தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சினைகள் எழும்.

விருச்சிகம்
மற்ற சில ராசிக்காரர்களை போலவே விருச்சிக ராசிக்காரர்களுக்கும் ஜூலை மாதம் மோசமான மாதமாக இருக்கும். இந்த ஆண்டு தொடக்கம் முதலே உங்களுக்கு சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும், அதிலும் ஜூலை மாதத்தில் மிகவும் அதிகமாக இருக்கும். மற்றவர்களுடனான உரையாடல்களில் உங்களுக்கு பல பிரச்சினைகள் எழும். சிலசமயம் கண்ணீர் வரவைக்கும் அளவிற்கு கூட பிரச்சினைகள் எழலாம்.

தனுசு
உங்கள் ராசிக்கான கிரகமானது வியாழன் ஆகும். இதனாலேயே உங்களுக்கு ஏப்ரல் மாதத்தில் பல பிரச்சினைகள் எழ நேரிடும். ஆண்டின் தொடக்கம் உங்களுக்கு அற்புதமாக இருந்தாலும், இந்த மாதத்தில் உங்களுக்கு நிறைய நிதி பிரச்சினைகள் எழும். அதேபோல நிலம் தொடர்பான பிரச்சினைகளும் எழ வாய்ப்புள்ளது. கோபமானது உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையையும் பாதிக்கும்.

மகரம்
மகர ராசிக்கும் மார்ச் மாதம்தான் சவாலான மாதமாக இருக்கப்போகிறது. உங்கள் ஜோதிடத்தில் ஏற்படும் மாற்றங்கள் தொடர்பு கொள்வதில் பல சிக்கல்களை உண்டாக்கும். புதன் கிரகத்தால் உங்கள் ஜாதகத்தில் ஏற்படும் பிரச்சினைகளால் பல பாதிப்புகள் ஏற்படலாம். உங்களின் எண்ணங்களையும், கருத்துக்களையும் வெளிப்படுத்துவதில் பல பிரச்சினைகள் உண்டாகும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஜூலை மாதத்தில் உறவுரீதியிலான பல மோசமான பிரச்சினைகள் ஏற்படலாம். இதற்கு நீங்கள் காரணமாக இல்லையென்றாலும் உங்களின் கடந்த கால வாழ்கையாலோ அல்லது உங்கள் துணையின் கடந்த கால வாழ்க்கையாலோ பிரச்சினைகளை சந்திப்பீர்கள். உங்களின் எண்ணங்களில் தெளிவாக இருங்கள், துணை மீது நம்பிக்கை வையுங்கள்.

மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு ஆகஸ்ட் மாதம் கொஞ்சம் மோசமான பலன்களை தரக்கூடிய மாதமாக இருக்கும். இந்த மாதத்தின் தொடக்கத்தில் உங்களின் ராசி அதிபதியால் சில நல்லது நடக்கலாம். ஆனால் மாதத்தின் பிற்பகுதியில் வியாழனின் ஆதிக்கத்தால் பணம் தொடர்பான சில பிரச்சினைகளை சந்திப்பீர்கள். இந்த பணப்பிரச்சினையால் தொடர்ந்து பல பிரச்சினைகள் எழும், இதனால் உங்கள் நிம்மதியும், குடும்பத்தின் மகிழ்ச்சியும் கெடும்.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமஞ்சள் மற்றும் மிளகை ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? வியப்பான தகவல்!
Next articleஇன்றைய ராசிப்பலன் – 10.01.2019 வியாழக்கிழமை!