20 பேர் பரிதாபமாக பலி! திருமணத்திற்கு சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!

0
245

அமெரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்தில் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இரு வாகனங்கள் மோதிக் கொண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்று மாலை 2 மணியளவில் நியூயோர்க் பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Schoharie நகரில் திருமண வைபவம் ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்று, இன்னுமொரு வாகனத்துடன் மோதியமையினால் விபத்து ஏற்பட்டுள்ளது.

இரண்டு வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி வீதிக்கு அருகில் இருந்த மரத்தில் மோதியமையினால் பெருமளவு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த பகுதி மக்களின் கூச்சல் சத்தம் கேட்டு அந்த பகுதியில் பொலிஸ் அவசர சேவைக்கு அறிவித்துள்ளனர். அதற்கமைய மேலும் சில உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர் விபரங்கள் இன்னமும் வெளியாகவில்லை.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக: