Home Jaffna News திருகோணமலை_ மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மாமியும், மருமகனும் படுகாயம்!

திருகோணமலை_ மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மாமியும், மருமகனும் படுகாயம்!

0
493

திருகோணமலை – மயிலவெவ பகுதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த மாமியும், மருமகனும் படுகாயமடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் படுகாயமடைந்தவர்கள் கோமரங்கடவல, மயிலவெவ பகுதியை சேர்ந்த மாமியான எஸ். நந்தாவத்தி (56 வயது) மற்றும் மருமகனான எம்.சசிக்க மதுசங்க (32 வயது) எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

மயிலவெவ பகுதியிலிருந்து மாமியாரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி வந்து கொண்டிருந்தபோது மாடு குறுக்கே பாய்ந்து விபத்து ஏற்பட்டதாகவும் மாமியின் வலதுகால் உடைந்துள்ளதாகவும் மருமகன் பலத்த காயங்களுக்கு உள்ளானதாகவும் தெரியவருகின்றது.

மேலும், படுகாயமடைந்த இருவரையும், மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சம்பவம் தொடர்பாக கோமரங்கடவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous articleஉங்கள் பெயர், செல்வம், புகழ் மேம்பட இந்த‌ கிழமைகளில் இவற்றை தவறாமல் செய்யுங்கள்!
Next article20 பேர் பரிதாபமாக பலி! திருமணத்திற்கு சென்றவர்களுக்கு ஏற்பட்ட விபரீதம்!