18 நாட்களாக குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களில் 4 பேரை மீட்பதில் சிக்கல்: அதிகாரிகள் தவிப்பு!!

0

தாய்லாந்தில் குகைக்குள் சிக்கியுள்ள சிறுவர்களில் 8 பேரை போராடி மீட்டுள்ள நிலையில் எஞ்சிய 4 சிறுவர்களையும் அவர்களின் பயிற்சியாளரையும் மீட்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தாய்லாந்தில் வெள்ள நீா் புகுந்த குகைக்குள் சிக்கியவா்களில் மேலும் 4 சிறுவா்களை மீட்புக் குழுவினா் திங்கள்கிழமை மீட்டனா்.

அதையடுத்து, கடந்த 2 நாள்களாக மேற்கொள்ளப்பட்டு வரும் கடுமையான மீட்புப் பணிகளில் குகையிலிருந்து வெளியே அழைத்துவரப்பட்ட சிறுவா்களின் எண்ணிக்கை 8-ஆக உயா்ந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது குகைக்குள் மேலும் 4 சிறுவா்களும், அவா்களது கால்பந்து பயிற்சியாளரும் மட்டுமே சிக்கியுள்ளனா்.

அவர்களை மீட்பதற்கு மேலும் ஒருநாள் தாமதமாகலாம் எனவும், ஆனால் அவர்கள் நல்ல உடற்தகுதியுடன் இருப்பதாகவும் அதிகாரிகள் தரப்பு தகவல் வெளியிட்டுள்ளது.

மீட்கப்பட்டவர்கள் தொடர்பில் சர்வதேச ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ள புகைப்படங்கள் குறித்து உறுதியான பதில அளிக்க மறுப்பு தெரிவித்த அதிகாரிகள்,

குகைக்குள் சிக்கியிருக்கும் சிறுவர்கள் தொடர்பிலும் பெற்றோருக்கும் தகவல் அளிக்க மறுத்துள்ளனர்.

இதனிடையே மீட்புப் பணிகளை முன்னின்று நடத்தி வரும் தாய்லாந்து கடற்படை சிறப்பு அதிகாரி சித்திசாய் கிளாங்பட்டானா, குகைக்குள் சிக்கியுள்ளவா்களை மீட்கும் பணி, திங்கள்கிழமையும் தொடா்ந்து நடைபெற்றது.

இதில், மேலும் 4 சிறுவா்களை மீட்புக் குழுவினா் குகைக்குள்ளிருந்து மீட்டு அழைத்து வந்தனா் என்றார். இருப்பினும், அந்த 4 சிறுவா்களின் உடல் நலம் குறித்து அவா் விளக்கமாகத் தெரிவிக்கவில்லை.

கடந்த மாதம் 23-ஆம் திகதி முதல் மழை வெள்ள நீா் புகுந்த குகைக்குள் சிக்கியிருந்த 13 பேரில், முதல்முறையாக 4 சிறுவா்களை மீட்புக் குழுவினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டு அழைத்து வந்தனா்.

மீட்கப்பட்ட அந்த 4 பேரும் நல்ல உடல் நலத்துடன் இருப்பதாகவும், மீட்புப் பணிகள் எதிர்பார்த்ததைவிட சுலபமாக இருந்ததாகவும் அப்போது அதிகாரிகள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துகளை இங்கே பதிக:

Previous articleமுகம், கைகள், கால்கள் மற்றும் பாதங்களில் தோன்றும் வெள்ளை திட்டுக்களை போக்குவது எப்படி?
Next articleஜாதகத்தில் சனி பகவானின் கெடு பலன்கள் குறைய!