ஜிம்பாவேவில் 16 பள்ளி மாணவிகள் கர்ப்பமாக இருப்பது பள்ளி நிர்வாகத்தினரையும், பெற்றோரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜிம்பாப்வேயின் சிருமன்சு மாகாணத்தில் உள்ள ஓர்டன் டிரிவிட் என்ற பள்ளியில் படித்து வரும் மாணவிகளுக்கு தேசிய எய்ட்ஸ் கவுன்சில் சார்பில் பரிசோதனை செய்யப்பட்டது.
அப்போது 16 பெண்கள் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து ஆசிரியர்கள் அதிர்ந்துபோயினர்.
இந்த மாணவிகள் கர்ப்பத்திற்கு காரணமானது யார் என்று விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அனைவரின் கர்ப்பத்திற்கு ஒருவர் தான் காரணமா அல்லது வெவ்வேறு நபர்கள் காரணமா என்று கேள்வி எழுந்துள்ளது.
மாணவிகள் கர்ப்பமானது பள்ளி நிர்வாகத்தினரையும், பெற்றோரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.