சுவிட்சர்லாந்தில் நுரையீரல் புற்றுநோய் சிகிச்சை காரணமாக தாய்மையடையும் நிலையை இழந்ததாக கூறும் சுவிஸ் யுவதி ஒருவர் தமது கடந்த கால வாழ்க்கையை பகிர்ந்துள்ளார்.
தற்போது 24 வயதான நினா என்பவர், தனக்கு 15 வயதாக இருக்கும் போது Frauenfeld பகுதியில் வைத்து இளைஞர் ஒருவரை சந்தித்துள்ளார்.
இருவரும் நெருக்கமாக பழகி வந்த நிலையில், ஒருநாள் தமது வாகனத்தில் செல்ல அழைப்பு விடுத்துள்ளார். முதலில் மறுப்பு தெரிவித்த நினாவை ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தியுள்ளார்.
உள்ளே சென்ற நினாவை அந்த நபர் உறவுக்கு கட்டாயப்படுத்தியுள்ளார். ஒருகட்டத்தில் அந்த நபரிடம் இருந்து தப்ப முடியாது என அறிந்த நிலையில், நினா வல்லுறவுக்கு இரையாக்கப்பட்டார்.
பின்னர் அந்த வாகனத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதுடன், அதற்கு பின்னர் அந்த நபர் நினாவின் பார்வையில் தென்படவில்லை.
சம்பவம் நடந்து 9 வாரங்களுக்கு பின்னர் நினாவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. நினா கர்ப்பமாக இருப்பதாக உறுதி செய்யப்பட்டது.

ஆனால் தம்மை வல்லுறவுக்கு இரையாக்கியவரின் குழந்தையை தாம் சுமக்க தயாரில்லை என அடம்பிடித்த நினா, கருக்கலைப்புக்கு ஒப்புக்கொண்டுள்ளார்.
அதன் பின்னர் அந்த கோர நினைவுகளில் இருந்து மீள தினசரி அரை லிற்றர் அளவுக்கு ஓட்கா அருந்திவிட்டு பாடசாலை செல்வதாக நினா பகிர்ந்துள்ளார்.
நினாவின் வாழ்க்கை மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது, அவர் மார்கோ என்பவரை சந்தித்துள்ளார்.
இருவரும் நட்பாக பழகி வந்த நிலையில், நினா மது அருந்துவதை மொத்தமாக கைவிட்டார். படிப்படியாக நினா தமது பழைய நினைவுகளில் இருந்து மீண்டு வந்த நிலையில்,
நினாவுக்கு நுரையீரல் புற்றுநோய் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதற்கான சிகிச்சைகள் மேற்கொண்டுவரும் நினாவால் இனிமேல் தாய்மையடைய முடியாது என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.